Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2019 13:10:37 Hours

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் இம் மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தில் ஒக்டோபர் மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் 30 படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் மாதம் (27) ஆம் திகதி கந்தசாமி ஆலயத்தின் குருக்களது தலைமையில் விஷேட தீபாவளி பூஜை வழிபாடுகள் 200 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து படையினரால் சிறுவர்களுக்கு 150 பரிசுப் பொதிகளும் கோயிலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய தீபாவளி நிகழ்வுகள் இம் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றன.

651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சாமத் வரகாகொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் முழங்காவில் பிள்ளையார் கோயிலில் 11 ஆவது கஜபா படையணியினால் இந்து பக்தர்கள் 50 பேருக்கு மரக்கறி உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் வேளாங்குளம் முத்துஅம்மன் கோயிலில் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஏற்பாட்டில் 100 பேருக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

652 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் W.L.A.C பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் ஆரோக்கியபுரம் அம்மன் கோயிலில் தீபாவளி நிகழ்வுகள் இடம்பெற்றன.

20 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் அரவிலந்தகுளம் விளையாட்டு கழகத்தினருடன் நட்பு ரீதியான கிரிக்கட் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

571 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் D.K.S.K தொலகே அவர்களது பணிப்புரைக்கமைய 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஏற்பாட்டில் இராணுவ முகாமிற்கு முன்பாக இம் மாதம் (27) ஆம் திகதி அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் மலையாளபுரம் பத்தினி அம்மன் கோயில் நுழைவாயிலில் வைத்து தேநீர்கள் பிஸ்கட்டுகள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.

572 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் D.M.P.P தசநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 6 ஆவது சிங்கப்படையணியின் ஏற்பாட்டில் மாங்குளம் சித்தி விநாயகர் கோயிலில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன. அத்துடன் 573 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதி கேர்ணல் U.L.J.S பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் முதலாவது சிங்கப் படையணியின் ஏற்பாட்டில் நாகதம்பிரான் கோயிலில் அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

574 ஆவது படைத் தளபதி கேர்ணல் I.A.N.B பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய 3 ஆவது கஜபா படையணியினரால் மாங்குளம் பிள்ளையார் கோயிலில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன. affiliate link trace | Sneakers