Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2019 11:17:07 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 30 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் வெலிகந்தையிலுள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

தலைமையகத்திலுள்ள அணிவகுப்பு மைதானத்திற்கு வருகை தந்த கிழக்கு படைத் தளபதியை கிழக்கு தலைமையகத்தின் பொது நிர்வாக அதிகாரி பிரிகேடியர் சமந்த சில்வா மற்றும் நிர்வாக பிரதானி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி அவர்கள் வரவேற்று 2 ஆவது (தொண்டர்) இலங்கை சமிக்ஞை படையணியினால் தளபதியவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதி அவர்களினால் தலைமையக விகாரை வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் தலைமையகத்திலுள்ள அனைவரது பங்களிப்புடன் இந்த நிகழ்வானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

மேலும் 16 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் 1000 மரக்கன்று நடுகை நிகழ்வுகள் இம் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றன. Asics shoes | Nike sneakers