Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2019 11:30:05 Hours

விசேட படையணினரின் பயிற்சிகளை கற்கும் முகமாக நைஜீரிய இராணுவத்தினர் வருகை

நைஜீரிய இராணுவத்தின் ஆறு குழுக்களைக் கொண்ட உயர் பிரதிநிதிகள் விசேட படையணியின் பயிற்சிகளை கற்றும் முகமாக ஐந்து நாள் விஜயத்தை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இக் குழுவினர் நைஜீரிய இராணுவத்தின் நிர்வாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி ஓயேபெசோபி அவர்களின் தலைமையில் பிரிகேடியர் ஜெனரல் ஜி கே நைவுசூ பிரிகேடியர் ஜெனரல் சி ஏ ஏ அபீர் கேர்ணல் டி பி ஓபிரும் லெப்டினன்ட் கேர்ணல் எஸ் எஸ் முகம்மட் மற்றும மற்றும் நைஜீரிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமாடோர் ஈ ஓ பெரீரத போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்கள் மாதுரு ஓயாவில் உள்ள விசேட படையணி பயிற்றுவிப்பு பாடசாலைக்கான விஜயத்தை 28ஆம் திகதி திங்கட் கிழமை காலை மேற்கொண்டதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களையும் சந்தித்தார். மேலும் இதன் போது விசேட படையணியின் இலங்கைக்கான திட்டமிடல் போன்றன விடயங்கள் கவரப்பட்டுள்;ளன.

இச் சந்திப்பின் போது உரையாற்றிய இராணுவத் தளபதியவர்கள் விசேட படையணியின் திறமைகள் வனப் பகுதிக்கான பயிற்சிகள் மற்றும் போரின் போது எல் ரீ ரீ ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்தமை தொடர்பாக இப் பிரதிநிதிகளிடம் விளக்கினார்.

மேலும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிகளில் நைஜீரிய இராணுவத்தினரையும் உள்ளடக்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் நைஜீரிய படையினர் தமது அனுபங்கள் மற்றும் அவர்களது இலங்கை தொடர்பான எண்ணங்கள் அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகள் நல்லிணக்கம் தொடர்பாக விசேட படையணியின் செயற்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

மேலும் இதன் போது வருகை தந்த நைஜீரிய பிரதிநிதிகள் வனப் பகுதிக்கான தொழில்நுட்ப முறைகள் மற்றும் விசேட படையினரின் திறமைகள் தொடர்பாக அறிந்து கொண்டதுடன் எதிர் காலத்தில் நைஜீரிய படையினரை இப் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ளல் தொடர்பாகவும் அவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் அதிகளவிலான நைஜீரிய படையினரை இப் பயிற்சிகளில் இதன் போது இணைத்துக் கொள்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மேஜர் ஜெனரல் ஜி ஓயேபெசோபி அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இச் சந்திப்பில் பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் டி எஸ் பங்சஜயா அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் இப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட கூட்டுப் படைப் பயிற்சிகள் அணிநடை மற்றும் நடவடிக்கைப் பயிற்சிகள் அத்துடன் துப்பாக்கி சூட்டு பயிற்சிகள் போன்றன இதன் போது இப் படையின் அதிகாரிகளால் இராணுவ வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இதன் போது இவர்களுக்கான தங்குமிட வசதிகள் மாதுரு ஓயா பயிற்றுவிப்பு பாடசாலையால் முன்னெடுக்கப்பட்டது. Nike shoes | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf