Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2019 10:10:48 Hours

இராணுவ தளபதி கண்டி புஸ்பாதன்ன மகளிர் பாடசாலை நிகழ்விற்கு விஜயம்

கண்டியிலுள்ள புஸ்பாதன்ன மகளிர் பாடசாலையின் விளையாட்டு துறையில் சாதனைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களை கெளரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட “வர்ண இரவு” நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை பாடசாலையின் அதிபர் திருமதி G.W. L. K எகொடவெல அவர்கள் வரவேற்று பின்னர் பாடசாலையின் பேன்ட் வாத்திய குழுவினர் மற்றும் கெடற் மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் கௌரவ மரியாதைகளை செலுத்தி இவரை நிகழ்ச்சி மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிகழ்வில் வரவேற்புரை கல்லூரி அதிபரினால் ஆற்றப்பட்டு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியின் கரங்களினால் இந்த கல்லூரியில் விளையாட்டு துறைகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புஸ்பாதன்ன மகளிர் கல்லூரியில் இருந்து தேசிய டைகொன்டோ போட்டிக்கு தேர்வாகிய சிறந்த வீராங்கனையாக செல்வி சந்தகோமி முகந்திரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு இவர் இந்த வர்ண இரவு நிகழ்வில் சிறந்த வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார். அத்துடன் கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம். மேசைப்பந்து, கொக்கி, ஜிம்னாஸ்டிக், நீச்சல்,டைகொன்டோ போட்டிகளில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களும் இந்த நிகழ்ச்சியினூடாக கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இராணுவ தளபதியவர்கள் உரை நிகழ்த்தும் போது இளம் வயதிலேயே விளையாட்டிற்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி கூறினார், ஏனெனில் இது ஒரு தனிநபரின் நல்வாழ்வை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்துகிறது. மாணவர்கள் வீரியத்துடன் படிப்பைத் தொடரவும், நாட்டின் பயனுள்ள குடிமக்களாக மாறவும் இது மிகவும் பயனாயுள்ளது என்று வலியுறுத்தினார்.

பின்னர் நன்றியுரை கல்லூரியின் விளையாட்டு துறைத் தலைவியான பினர்மல்லி பண்டார அவர்களினால் ஆற்றப்பட்டன.

இந்த கல்லூரியானது 1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது முதலில் பௌத்த மகளிர் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 77 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளது.

இந்த பாடசாலையானது தனியார் பாடசாலையாக ஆரம்பித்து 1961 ஆம் ஆண்டு அரச பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு சிங்கள, ஆங்கில மொழிகளை கொண்ட பாடசாலையாக விளங்குகின்றது. Nike shoes | Sneakers