Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2019 23:38:28 Hours

பத்தரமுலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது நிறைவான்டானது இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெறவிருவதை முன்னிட்டு அதன் சார்பாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (8) ஆம் திகதி பகல் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து தேசிய மற்றும் இராணுவ கீதங்களை இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை செலுத்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

சுமார் இலங்கை இராணுவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அவர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நினைவு தூபி வளாகத்தினுள் இராணுவத்தினரது ஹேவிஷி, புரபது. மகுல் பெர, கெடபெர நாத மேள தாளங்களுடன் இந்ந நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாக இசைக்கப்பட்டன. பின்னர் இராணுவ தளபதி மற்றும் மூத்த உயரதிகாரிகள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக நினைவு தூபிக்கு சென்று மலரஞ்சலிகளை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன இராணுவ உயரதிகாரிகள் ,முப்படை அதிகாரிகள் இராணுவத்தின் உறவினர்கள் படையினர் கலந்து கொண்டனர். Best Sneakers | Gifts for Runners