Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2019 05:53:33 Hours

593 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

கேர்ணல் வசந்த பாலமாகும்புர அவர்கள் 593 ஆவது படைத் தலைமையகத்தின் 12 ஆவது கட்டளைத் தளபதியாக இம் மாதம் (4) ஆம் திகதி நாயாரில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது பதவியை சமய அனுஷ்டாக ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

புதிதாய் பதவியேற்க வருகை தந்த கட்டளை தளபதிக்கு 5 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி, தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் நட்டு பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் 19 ஆவது கெமுனு காலாட் படையணி, 5(தொ) சிங்கப் படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best Authentic Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp