Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2019 11:32:06 Hours

யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற இராணுவ கண்காட்சி

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் யாழ் தலைமையகத்திற்கு கீழுள்ள படையினரால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான இராணுவ கண்டுபிடிப்பு கண்காட்சி இம் மாதம் 5- 6 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றன.

இராணுவத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்காட்சிகளை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்கள் வருகை தந்தனர்.

இந்த இராணுவ கண்காட்சியில் இராணுவத்தினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சிகளில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களை 14 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் W.P.W திசாநாயகவும், 4 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் G.C.C.R பொன்சேகாவும், 7 ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை S.D.N மல்ஷா அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் 4 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பதவிநிலை சாஜன் L.A.D கருணாதிலக அவர்களினால் உட்புற நீர் தொட்டி மீட்டர் அலகு இயந்திரமும், முதலாவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் Y.S.A.U டு சில்வாவினால் புலனாய்வு ரோந்து கண்காணிப்பு இயந்திரமும், 6 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் B.M.M.B ஹேரத் அவர்களினால் மல்டி பாதுகாப்பு இயந்திர உபகரணங்கள் இந்த கண்காட்சியில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ் மாவட்ட செயலாளர் திரு நாகலிங்கம், வடமாகாண கடற்படை பிராந்திய கட்டளை தளபதி ரியர் அத்மிரால் கபில சமரவீர, 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேஹொட மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike air jordan Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival