Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2019 19:02:03 Hours

பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜயசிங்கவிற்கு கௌரவ மரியாதை

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களுக்கு அவரது பதவி உயர்வின் நிமித்தம் படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (3) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 621, 622, 623 படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | NIKE HOMME