Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2019 07:53:33 Hours

மாவத்தகமையில் இடம்பெற்ற மெஹா ‘ஹாடியன்ஷ்’ மேலா 2019 நிகழ்ச்சி

இலங்கை இராணுவத்திலுள்ள தேசிய பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மெஹா ‘ஹாடியன்ஷ்’ மேலா 2019 நிகழ்ச்சி மாவத்தகமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளாகிய இம் மாதம் (1) ஆம் திகதி சீட்டிழுப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் R.A.J ரணவக அவர்கள் வரவேற்றார்.

‘ஹாடியன்ஷ்’ மேலா நிகழ்வானது ஆகஸ்ட் மாதம் 30 திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை கூடுதலான சன கூட்டங்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியினூடாக கிடைக்கப் பெற்ற நிதியானது இந்த படையணியின் நலன் புரித் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியா வருகை தந்த இராணுவ தளபதி அவர்களினால் சீட்டிழுப்பின் மூலம் அதிஸ்ட்டசாலிகளான மூன்று வெற்றியாளர்களுக்கு காசோலை பரிசுகளை வழங்கி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா செல்ஷன் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ரனவக அவர்களினால் 2 இலட்ச காசோலை நிதி இராணுவ சேவா வனிதா பிரவின் நலன்புரித் திட்டத்திற்காக இந்த நிகழ்ச்சியினூடாக கையளிக்கப்பட்டன.

மூன்று நாள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சிகளிற்கு பிரதம அதிகளாக மேஜர் ஜெனரல் R.A.J ரணவக, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுனில் தென்னகோன், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

‘ஹாடியன்ஷ்’ மேலா நிகழ்ச்சியில் இலங்கையில் புகழ் பெற்ற இன்னிசை குழுவான ‘ப்ளேஷ் பெக்’, ‘சன்பிலவர்’ மற்றும் ‘சீதுவ சகுரா’ குழுவினர் இன்னிசைகளை வழங்கி மக்களை மகிழ்வித்தனர். அத்துடன் புகழ் பெற்ற பாடகர்களான சானிகா வனிகசேகர, விராஜ் பெரேரா, நோயல் ராஜ், தனபால உடவத்த, ஜிஞ்சர் வயிட், சானிகா நிரோஷா, சேனாநாயக வெரலியத்த, சுப்ரிய அபேசேகர அவர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன் சிறந்த நடன குழுவான சைன் எரோஷ், அலெக்‌சுடன் டேஷ், ரெட் எரோஷ் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிகளில் இலங்கை படைக் கலச் சிறப்பணி, பீரங்கிப் படையணி, ரயிபல் துப்பாக்கிச் சூட்டு ஹேம், கொமாண்டோ படையணியில் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களின் திறமைகளை வெளிக்காட்டும் காண்காட்சிகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News