Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2019 20:05:48 Hours

சமிக்ஞை படையணியில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிக்கு இராணுவ மரியாதைகள்

இலங்கை சமிக்ஞை படையணியில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் ரஞ்ஜித் தர்மசிறி அவர்களுக்கு பனாகொடையிலுள்ள தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் இம் மாதம் (4) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

சமிக்ஞை தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை இந்த படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் பாலித பெரேரா அவர்கள் வரவேற்றார். பின்னர் இவருக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவருக்கு சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதியும் ,இராணுவ சமிக்ஞை பிரதானியுமான மேஜர் ஜெனரல் N.M ஹெட்டியாரச்சி அவர்கள் இவரது பதவியுயர்வை முன்னிட்டு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்து இவருக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் இந்த உயரதிகாரி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டு குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் ரஞ்ஜித் தர்மசிறி அவர்கள் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணியகத்தின் பணிப்பாளர் ஆவார். short url link | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ