Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2019 19:01:03 Hours

இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் தடவையாக பெறுமதிமிக்க சலுகை பரிசுகள்

இலங்கை இராணுவத்தின் 97 ஆவது மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றி தேசிய மட்டத்திற்கான சாதனைகளை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல் தடைவையாக பெறுமதிமிக்க விஷேட பரிசுகளான மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் விளையாட்டு காலனிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மெய்வல்லுனர் போட்டிகளிற்கு சிமிலரி, ஹட்சின்ஷன் டெலிகொம் தனியார் நிறுவனத்தினர் முழுமையான அனுசரனைகளை வழங்கி வைத்துள்ளனர்.

இந்த மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான சிறந்த விளையாட்டு வீரராக இலங்கை மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த போர் வீரன் L.G தனஞ்ஜயவும், பெண்களுக்கான போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக 7 ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த சாஜன் ரத்னாயக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் 2 ஜமஹா இனத்தைச் சேர்ந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு பூமா இனத்தைச் சேர்ந்த விளையாட்டு காலணிகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த போட்டிகளில் பங்கேற்றிய வீர்ர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி 27 சின்னங்களையும், 38 தங்கப் பதக்கங்களையும், 24 வெ ள்ளிப் பதக்கங்களையும், 18 வெண்கல பதக்கங்களையும் பெற்று சாதனைகளை புரிந்துள்ளனர்.

மகளிர் படையணியைச் சேர்ந்த போர வீராங்கனை விதுஷா லக்‌ஷானி முப்பாய்ச்சல் போட்டிகளிலும், சிறந்த ஈட்டி ஏய்தாலராக கோப்ரல் லக்சிகா அவர்கள் கலந்து கொண்டு தேசிய ரீதியிலான மட்டங்களிற்கு தேர்வாகினர்.

இந்த போட்டிகள் இராணுவ மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவரும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 16 – 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. jordan Sneakers | Air Jordan