Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2019 07:43:34 Hours

மொஷ்கோவில் நடன கலையை சிறப்பாக வெளிக்காட்டிய நடன கலைஞர்களுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

ரஷ்யாவில் இடம்பெற்ற சர்வதேச இராணுவ விளையாட்டு - 2019 இல் நடன குழுவில் பங்கேற்றி திறமைகளை வெளிக்காட்டிய இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த படை வீர ர்களான கோப்ரல் S.K.D ராஜபிரிய, கோப்ரல் E.A ரங்க குமார மற்றும் கோப்ரல் B.G பெலிகல்ல அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (4) ஆம் திகதி மாலை சந்தித்தனர்.

ஆகஸ்ட் மாதம் 3 – 17 ஆம் திகதி வரை ரஷியா மொஷ்கோவில் இடம்பெற்ற சர்வதேச இராணுவ விளையாட்டு – 2019 இல் நடன குழுவில் பங்கேற்றி திறமைகளை வெளிக்காட்டி எமது நாட்டிற்கு பெருமையை பெற்றுத் தந்த வீரர்கள் இராணுவ தளபதியை சந்தித்த போது இராணுவ தளபதி அவர்களினால் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இராணுவ தளபதியவர்களினால் ரஷ்யாவில் அவர்களின் அனுபவங்களை விசாரித்து பராட்டுக்களை தெரிவித்து அவர்களை ஊக்குவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பேன்ட் மற்றும் கலையியல் பணியகத்தின் பணிப்பாளர் கேர்ணல் சமன் ஜயக்கொடி அவர்களும் இணைந்து கொண்டார். Nike sneakers | Nike Shoes, Sneakers & Accessories