Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2019 07:10:24 Hours

பாகிஸ்தான் உயரதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

பாதுகாப்பு கருத்தரங்கிற்காக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் உயரதிகாரி மேஜர் ஜெனரல் சாஹிட் நசீர் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி பணடாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

மேஜர் ஜெனரல் சாஹிட் நசீர் அவர்கள் 1989 ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து பயிற்சி நிறைவின் பின்னர் பாகிஸ்தான் பஞ்சாப் படையணியினுள் உட்புகுத்தப்பட்டுள்ளார் பின்னர் பொது அதிகாரி, வெளிநாட்டு பணியாளர்கள் பாடநெறி, துருக்கி, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், இஸ்லாமாபாத் மற்றும் அமெரிக்கா இராணுவ பயிற்சி கல்லூரியின் பட்டதாரி ஆவார். பல்வேறு கட்டளைகள், பணிப்பாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார், இதில் ஒரு காலாட்படை படையணியின் பொது பணியாளர் அதிகாரி 3, பிளாட்டூன் கொமாண்டர் பாகிஸ்தான் இராணுவ எகடமி, காகுல், ஒரு காலாட்படை படையணியின் படைப்பிரிவு மேஜர், பொது பணிப்பாளர் அதிகாரி - இராணுவ நடவடிக்கை பணிப்பாளர், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியின் இராணுவ செயலாளராகவும் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் Running sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals