Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2019 18:58:03 Hours

தம்புள்ளையில் இடம்பெற்ற ‘ரணவிரு உதானய’ 2019 நிகழ்ச்சி

இலங்கை பொறியியல் காலாட் படையணியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ‘ரணவிரு உதானண’ 2019 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் (1) ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாகபொறியியல் காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ ஊடக பணிப்பாளரும், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ பேச்சாளருமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்கள் வருகை தந்தார். இவரை இப்படையணியின் பிரதி கட்டளைத் தளபதி கேர்ணல் ஜானக பிரியதர்ஷன அவர்கள் வரவேற்று படைத் தளபதி அவர்களினால் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பெரும்பாலான சனக் கூட்டத்துடன் இந்த நிகழ்ச்சியானது படையினரது முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர் கார்னிவல், விவசாய உற்பத்தி கண்காட்சிகள் இராணுவ குடும்ப அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இரண்டு நாள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையில் புகழ்பெற்ற இன்னிசை குழுவான சஹார பிளேஷ், எரோ ஸ்டார், பிளேஷ் பெக் குழுவினர் இன்னிசைகளை வழங்கியதுடன் இலங்கையில் புகழ் பெற்ற பாடகர், பாடகிகள் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இராணுவ மனித உரிமைக்குழு பணிப்பாளர் பிரிகேடியர் A.G.D.N ஜயசுந்தர, படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ப்ரெட்ரிகா அதபத்து அவர்கள் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov