Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2019 19:31:31 Hours

2019 - கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் இடம்பெற்ற பயங்கரவாதம் தொடர்பான உரை

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் இந்த ஆண்டிற்கான 'சமகால பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல் ' எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 9 வது 'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு - 2019, உலகளாவிய பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் கிட்டத்தட்ட 800 படையினர், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோரினால் உலகெங்கிலும் காணப்படும் 'பயங்கரவாதத்தின்' அச்சுறுத்தலுக்கு விரிவான மற்றும் ஒத்திசைவான மூலோபாய மற்றும் நடைமுறை தீர்வுகளைக் கண்டறியும் முயற்சியை மேற்கொள்வதாக உறுதியளித்ததோடு, இந் நிகழ்வு இன்று மாலை 30 ஆம் திகதி நிறைவடைந்தது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் வருகையைமேற்கொண்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. ரவிநாத ஆரியசிங்க அவரகளினால் இக்கருத்தரங்கின் இறுதியுரையானது ஆற்றப்பட்டது. மேலும் அவரது இறுதியுரையில் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை சம்பந்தமாக குறிப்பிடப்பட்தோடு, ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதார மற்றும் மக்களின் இயல்பு நிலைக்காக நாட;டில் முன்னெடுக்கப்பட்ட தொடர்சியான நடவடிக்கைகள் பற்றியும் உரையாற்றினார்.

ஞாயிறு தாக்குதலின் பின்னர் அவசரகால சட்டத்தினை விதித்து அனைத்து இன சமூகங்களின் ஆதரவோடு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்தது மற்றுமல்லாமல் யு.என்.எஸ்.ஜி தீர்மானங்களின்படி மூன்று பெரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தடைசெய்து அவர்களின் நிதி ஆதாரங்களை முடக்கி மற்றும் பயங்கரவாத வலையமைப்புடன் அல்லது ஆதரவளிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்கள், உதவி செய்தவர்களை கைதுசெய்ததுடன் குறுகிய காலத்திற்குள் அரசாங்கத்தினால் அவர்களின் வெளிநாட்டு வலையமைப்பு மற்றும் நிதி ஆதாரங்களை பெருமளவில் தடைசெய்ய முடிந்தது. இந்த மாநாட்டின் மூலம் கூட்டு கொள்கையினை உருவாக்குவதற்கான ஒரு தளத்தினை வழங்குகின்றது. உலகளாவிய மூலோபாயமானது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுமட்டுமல்லாமல்; மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் கானப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவம் மற்றும் இராணுவ தளபதியினால் உலக வல்லுநர்களுக்ளின் பங்களிப்புடன் நடாத்தப்படும் இக்கருத்தரங்கில் 'சமகால பாதுகாப்பு சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக கலந்துறையாடியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜயாஹ் அவர்களின் தலைமையில், இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் ஒழுங்கமைப்புடனான இந்த வருட அமர்வானது ஒன்பது கடடங்களைக் கொண்ட சிறந்த அமர்வுகளாக காணப்பட்டன.

ஒத்த எண்ணங்களையுடைய வெளிநாட்டு பிரதிநிதிகள் ,உள்ளூர் வல்லுநர்கள், மற்றும் அறிஞர்களினால் சமகால பிரச்சினைகள் தொடர்பாக அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் மாறுபட்ட வகைப்படுத்தலின் இருப்பு பல எழுச்சியூட்டும் முன்னோக்குகளுக்கும் முடிவெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்மையானது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து விடுபட்ட ஒரு உலகளாவிய சமுதாயத்தை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.

சிறந்த ஒன்பது கருத்தரங்கு அமர்வுகள் மற்றும் நான்கு குழு அமர்வுகளில்; தொடர்ச்சியாக உரையாடிய மற்றும் கலந்துரையாடிய அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

மேலும் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக் கருத்தரங்கில் முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டதோடு ஆளுனர்கள், ஜனாதிபதி ஆலோசகர்கள், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை பிரதாணி ,இராணுவ கடற்படை விமானப்படை தளபதிகள், ஓய்வு பெற்ற தளபதிகள், வெளிநாட்டு இராணுவ பிரமுகர்கள் மற்றும் அரச பிரதிநிகள் உட்பட பலர் கலந்கதுகொண்டனர்.

இராணுவ தளபதியின் வரவேற்புரையினைத் தொடந்து பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்;டகொட அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடந்து ஹவாயில் உள்ள ஆசிய-பசிபிக் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முன்னாள் மாணவர் மற்றும் ஒரு ஊடக தொழில்முனைவோர் மூலோபாய விவகார ஆய்வாளர் மற்றும் இராணுவ வரலாறு மற்றும் கிளர்ச்சிகள் குறித்த புத்தகங்களின் எழுத்தாளருமான திரு நித்தின் ஏ.கொகெல் அவர்களினால் சிறந்த சிறப்புரை நிகழத்தப்பட்து.

13 வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 14 உள;நாட்டு பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 20 நிமிட நேரத்திற்குள் கருப்பொருள் பாடத்தின் மாறுபட்ட அம்சங்களில் சவால்கள் மற்றும் சங்கடங்கள, மூல காரணங்கள்,உலக நிர்வாகத்தின் தாக்கங்கள்,சட்டரீதியான தாக்கங்கள், ஆயுதப்படைகளின் பங்கு, உள் பாதுகாப்பிற்கான கல்வி உத்திகள், பொது இராஜதந்திரம், கடின சக்தி மற்றும் மென்மையான சக்தியை சமநிலைப்படுத்துதல், சமூகங்களை மேம்படுத்துதல், நான்காம் தலைமுறை போர் போன்றவை உட்பட அனைத்து பகுதிகளை முழுமையாக உள்ளடக்கி காணப்பட்டது.

மூத்த பேராசிரியரும்இ ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் ஜயவர்தன, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் வெளியுறவு விவகார அமைச்சின் செயலாளருமான திரு. எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகள் கல்வி மையத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹரிந்த விதானகே, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான டொக்டர் சரலாலா பெர்னாண்டோ, பங்களாதேஷ் அரசாங்கத்தின் முன்னாள் கண்காணிப்பு வெளியுறவு அமைச்சர் டொக்டர் இப்தேகர் அகமது சவுத்ரி , பாத்பைண்டர் அறக்கட்டளையின் இந்தோ-லங்கா முயற்சிகள் மையத்தின் பணிப்பாளரும் இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகம் மற்றும் லெஷன் நோமல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு), பங்களாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.என்.எம் முனிருஸ்ஸமான், புகழ்பெற்ற சக மற்றும் அணு மற்றும் விண்வெளி கொள்கை முன்முயற்சியின் கண்காணிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டொக்டர் ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன், அணு மற்றும் விண்வெளி கொள்கை முன்முயற்சி கண்காணிப்பாளர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான திரு. ஆசாத் உல்லா கான் , ஆர் அன்ட் டி டொமைனை மையமாகக் கொண்ட ருமேனிய தனியார் நிறுவனமான கியூ ஏஜென்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் திரு டேனியல் கேப்ரியல் தினு , ரஷ்ய ஆயுதப் படைகளின் மின்னணு போர் தலைமைப் பிரிவின் குழுத் தலைவர் கேர்னல் பாவெல் வி. செர்னிஷோவ், கூட்டு இராணுவ ஆய்வுகள் திட்டத்தில் மூலோபாய ஆய்வுகள் பேராசிரியர் டொக்டர் அகமது சலா ஹாஷிம், சர்வதேச பட்டப்படிப்பு கல்லூரியின் எஸ். ராஜரத்தினம், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் தேசிய பல்கலைக்கழக சிங்கப்பூரின் டொக்டர் சுலனி அத்தநாயக்க.

உலகளாவிய இடர் மற்றும் பின்னடைவு ஜெனீவா பாதுகாப்பு கொள்கைக்கான மையத்தின் தலைவர் டொக்டர் ஜீன்-மார்க் ரிக்லி, ஜெனீவா மையத்தில் ஜனநாயக கட்டுப்பாட்டு ஆயுதப்படைகளின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவர் டொக்டர் ஆல்பிரெக்ட் ஷ்னாபெல், சுயாதீன ஆராய்ச்சியாளர் டொக்டர் ஆண்ட்ரியா ஸ்டோயன் கரடெலி , ஏ. பிரவுன், பி.எச்.டி. - மூத்த விரிவுரையாளர், உள்நாட்டு பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் பாதுகாப்புத் துறை கடற்படை முதுகலைப் பள்ளி மான்டேரி, கலிபோர்னியாவின் டொக்டர் ஷானன், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர , பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தெமடம்பிடிய, வடமேற்கு கடலோர கட்டளை தளபதி ரியர் அத்மிரால் ருவன் பெரேரா, விமானப்படை பயிற்சி பணிமனையின் பணிப்பாளர் எயார் வைஷ் மார்ஷல் பிரசன்ன பயோ, திட்டம் மற்றும் கொள்கை ஆய்வாளர் - பெண்கள் உரிமைகள் மற்றும் பாலின ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி இலங்கை செல்வி ஷரிகா குரே , சுயாதீன வழக்கறிஞர் (சட்டத்தின் வழக்கறிஞர் வருகை விரிவுரையாளர் களனி பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய உறுப்பினர் பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் திரு. இந்திகா பெரேரா , பண்டாரநாயக்க வருகை ஆராய்ச்சி சக சர்வதேச ஆய்வுகள் மையம் மற்றும் மூலோபாய ஆய்வுத் துறை விரிவுரையாளர் திரு நிலந்தன் நிருந்தன், கே.டி.யுவில் மூலோபாய ஆய்வுகள் துறை விரிவுரையாளர் திரு சனத் சந்தன டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு தங்களது உரைகளை நிகழ்தினர். best Running shoes brand | Releases Nike Shoes