Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2019 14:19:55 Hours

212 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

கேர்ணல் P.A.M பீரிஸ் அவர்கள் 212 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக இம் மாதம் (15) ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய கட்டளை தளபதியை படையினர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்றனர்.

இந்த படைத் தலைமையகத்தின் முன்னாள் கட்டளை தளபதியான பிரிகேடியர் M.P லமாஹேவா அவர்கள் 581 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கேர்ணல் P.A.M பீரிஸ் அவர்கள் இராணுவத்தில் முக்கிய பதவிகளான கட்டளை, தலைமைத்துவம் மற்றும் பதவிநிலை அதிகாரி பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை கேர்ணல் தர அதிகாரியாக இருந்து கடமை இடமாற்றம் நிமித்தம் 212 ஆவது படைத் தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டார். Nike Sneakers Store | Nike Running