Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2019 12:29:56 Hours

புதிய இராணுவ தளபதி முன்னாள் இராணுவ தளபதியிடமிருந்து இராணுவ தளபதிக்கான உத்தியோகபூர்வ கோல் (பெட்டன்) பெறுகை

முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தனது இராணுவ சேவையிலிருந்து விடைபெற்று செல்லும் இச்சமயத்தில் இன்று காலை (20) ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிற்கு இராணுவ தளபதிக்கான உத்தியோகபூர்வ கோலை அவரது பணிமனையில் வைத்து வழங்கி வைத்தார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த முன்னாள் இராணுவ தளபதிக்கு நுழைவாயிலில் வைத்து இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் இராணுவ தலைமையக பணிமனைக்கு வருகை தந்த முன்னாள் இராணுவ தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வரவேற்று தற்போதைய இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்ற முன்னாள் இராணுவ தளபதி ஆவணங்களில் கையொப்பமிட்டு தற்போதைய புதிய இராணுவ தளபதியிடம் இராணுவ தளபதிக்கான உத்தியோகபூர்வ கோலை கையளித்தார். முன்னாள் இராணுவ தளபதி இரண்டு வருடம் தளபதி பதவியிலிருந்து பாரிய சேவைகளை மேற்கொண்டு இராணுவத்திலிருந்து விடைபெற்றுச் செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். முன்னாள் இராணுவ தளபதியவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்பு பணிமனையில் வைத்து இராணுவ மூத்த அதிகாரிகள், பணிப்பாளர்கள், பதவிநிலை அதிகாரிகள் மற்றும் படை வீரர்களை சந்தித்து உரையாடினார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி 22 ஆவது புதிய இராணுவ தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தனது பதவிக் காலத்தினுள் நாட்டிற்காக பாரிய சேவையை வழங்கியுள்ளார். உதாரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் அவசர கால நிலைமைகளின் போது படையினரை அணிதிரட்டி பாரிய சேவையை நாட்டிற்காக மேற்கொண்டுள்ளார். அத்துடன் இனமத பேதங்களின்று நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் மேற்கொண்டு பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார் .

தனது பதவிக் காலத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் இராணுவத் தளபதி, தனது பதவி காலத்தினுள் படைகளை இனவாத வன்முறை, இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளின் எழுச்சி, பயங்கரவாத த்தை கைது செய்தல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், மனிதாபிமான நலத்திட்டங்கள், தேவைப்படுபவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்கள், மீட்பு மற்றும் நிவாரண பணிகளிற்கு ஊக்குவிப்பை மேற்கொண்டார். அத்துடன் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் “துருலிய வெனுவென் அபி” எனும் தொனிப் பொருளின் கீழ் மரநடுகை திட்டத்தை நாடாளவியல் ரீதியாக மேற்கொண்டார். மேலும் இராணுவத்தினுள் மூன்றில் ஒரு பகுதியை பாதுகாப்பிற்காகவும், மூன்றில் ஒரு பகுதியை தேசத்தைக் கட்டியெழுப்பவும், மீதியுள்ளதை நிர்வாகத்திற்காகவும் ஒதுக்கி வைக்கும் திட்டத்தை இராணுவத்தினுள் அமுல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க சிறந்த விடயமாகும்.

நாடாளவியல் ரீதியாக உள்ள 500 புராதன குளங்கள் வேளான்மையை விருத்தியடையச் செய்யும் நோக்குடன் அபிவிருத்தி செய்யப்பட்டன. இராணுவம் பேரழிவுக்குப் பின்பு நிவாரணப் பணிகள் மற்றும் பிற பணிகளை முன்வைத்தார். அதாவது சமூகத்திற்கு இயல்புநிலையைக் மேற்கொண்டு வரும் நோக்கத்துடன். டெங்கு கட்டுப்பாடு, வீடுகள் நிர்மானிப்பு, மீள்குடியேற்ற திட்டங்கள் போன்ற திட்டங்களை மேற்கொண்டார். அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மற்ற பங்குதாரர்களுடன் நெருக்கமாக நெருக்கமான உறவு முறையை மேற்கொண்டார். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு பயணங்களை மேம்படுத்துதல் மற்றும் ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர்களுக்கான பயிற்சி வசதிகள், படையினருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல். பழைய அல்லது சேதமடைந்த கட்டிடங்களை புனரமைத்தல், வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்தல், தடகள மற்றும் விளையாட்டுகளை மேம்படுத்துதல், 'அங்கம்பொர' போன்ற பண்டைய தற்காப்புக் கலைகளை படையினர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தி இராணுவத்தினுள் உள்ள படையினர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி ஊக்குவித்தார்.

மேலும் சிவில்-இராணுவம் போன்ற தேசிய திட்டங்களுக்கு இராணுவ தளபதியின் அர்ப்பணிப்புடன் பாரிய. திட்டங்களான, வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் அதிக வெளிநாட்டு பயிற்சி நிலையங்களை திறத்தல், கொடுப்பனவுகளை அதிகரிப்பதன் மூலம் படையினரின் நலன் மற்றும் சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவை இராணுவத்தினுள் தனக்கென ஒரு முக்கிய இடத்தை ஒதுக்கி சில முக்கிய திட்டங்களை மேற்கொண்டார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த தேவைகளின் நிமித்தம் இராணுவத்தினால் நாட்டிற்கான பாரிய சேவையை வழங்கி நாட்டின் இறையான்மை ஆட்புள ஒருமைப்பாட்டை அதிசிறந்த முறையில் மேற்கொண்டார். மேலும் பரந்த வெளிநாட்டு அனுபவங்களையும் ஜெனரல் சேனநாயக்க அவர்கள் பெற்றிருந்தார். jordan Sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp