Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2019 13:28:54 Hours

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிப்பு

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யூஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி நிலைக்கு உயர்தப்பட்டு 23ஆவது இராணுவத் தளபதியாக 18ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இவ் அதிகாரியவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் முன்னர் கஜபா படையணித் தலைமையக தளபதியாகவும் கொமாண்டோ படையணித் தலைமயக தளபதியாகவும் சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் இத் தளபதியவர்கள் தமது 34வருட கால இராணுவ சேவைக்காலத்தில் பலவாறான முக்கிய பதவிகளை வகித்ததுடன் மேலும் அவர் மே மாதம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் நாட்டில் ஏற்றபட்ட பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் நடவடிக்கைப் பணிகளை தமது படையணி படையினருடன் இணைந்து முன்னின்று தலைமை தாங்கி நடாத்தியுள்ளார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் போரின் போது தமது முழு ஒத்துழைப்பை வழங்கி செயற்பட்டமைக்காக மிக உயர்ந்த பதக்கமான வீர விக்கிரம விபூஷன பதக்கத்தை பெற்றுள்ளார்.

அந்த வகையில் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யூஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் இராணுவத் தலைமயகத்தில் நிர்வாக ஜெனரலாக சேவையாற்றியுள்ளார். மேலும் இலங்கை இராணுவ அக்கடமிக்கு பெருமை சேர்க்கும் வகையில் காணப்பட்ட இப் புதிய தளபதியவர்கள் 05ஆம் திகதி மார்ச் மாதம் 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையணியில் 19ஆம் பிரிவில் இராணுவத்தில் இணைந்துள்ளார். மேலும் இவர் செக்கன்ட் லெப்டினன்ட் முதல் மேஜர் ஜெனரல் வரை இராணுவத்தில் பலவாறான பதவிகளை வகித்துள்ளார். மேலும் முக்கிய பதவிகளான பயிற்றுவிப்பு அதிகாரி ஸ்டாப் அதிகாரி மற்றும் தளபதி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கான நியூ யோர்க் ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக காணப்பட்டுள்ளார். அத்துடன் அவர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அரசியல் மற்றும் காலனியாதிக்க சங்கத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். மேலும் இவர் ஐக்கிய நாடுகளின் சமூகம் மனிதாபிமானம் மற்றும் கலாச்சார தொடர்பாடல் சங்கத்தின் இலங்கைக்கான ஆலோசனைப் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். மேலும் இவர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 66 67 68 மற்றும் 69ஆவது மாநாடுகளில் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பலவாறான முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

மேலும் இத் தளபதியவர்கள் காலாட் படையணி அதிகாரியாக பலவாறான கட்டளை பதவிகளை அத்துடன் படைக் குழு தளபதியாக மற்றம் காலாட் படையணியின் கட்டளைத் தளபதியாகவும் காணப்பட்டுள்ளார். மேலும் இவர் 1987ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தன அவர்களின் ஜனாதிபதி இல்லத்திற்கான பாதுகாப்பு வழங்கும் இராணுவ பிரிவிற்கு தலைமை தாங்கியுள்ளார். அத்துடன் இப் புதிய தளபதியவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 58ஆவது படைத் தலைமையக மற்றும் கொமாண்டோ படைப் பிரிவிற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் அவர் 53ஆவது படைத் தலைமையகம் மற்றும் ஏயார் மொபைல் படைப் பிரிவு போன்றவற்றிற்கும் தலைமை வகித்துள்ளார்.

மேலும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கை இராணுவத்தின் முக்கியமான காலப் பகுதிகளில் மூன்று காலாட் படையணி பிரிவுகளிற்கு தலைமை வகித்துள்ளார். அத்துடன் இவ் அதிகாரியவர்கள் இராணுவ செயளாலர் கிளையில் திட்டமிடல் பணிப்பகம் பயிற்சிப் பணிப்பகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஸ்டாப் அதிகாரி போன்ற பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவடைந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் இராணுவத் தலைமையகத்தில் நடவடிக்கை பணிப்பக பணிப்பாளர் மற்றும் கொமாண்டோ படையணித் தலைமையக தளபதியாகவும் பதவிவகித்துள்ளார். Nike air jordan Sneakers | Buy online Sneaker for Men