Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2019 22:35:54 Hours

தேவைநாடும் குடும்பத்தாரிற்கு வன்னி படையினரால் சமூக சேவை வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு

கஹடகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள சமதிகம சேப்புக்குளம பிரதேசத்தில் தேவையுள்ள குடும்பத்தாரின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் நோக்கில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 12ஆவது முறையாக புதிய வீடமைப்பு அமைக்கும் சமூக சேவை வேலைத் திட்டத்திற்கு அமைவாக புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது கடந்த வெள்ளிக் கிழமை (16) இடம் பெற்றதோடு இந் நிகழ்விற்கான ஊடக அனுசரனையை ஐடிஎன் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கியிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதியக்கு பதிலாக 21ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்கள் கலந்து கொண்டதோடு ஐடிஎன் தொலைக்காட்சி அலைவரிசையின் பிரதேச செயலாளர் திரு ஜயந்த ஸ்ரீ ரத்நாயக்க 212 படைத் தளபதியான கேர்ணல் அணில் பீரிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தேவையுள்ள குடும்பத்தாரின் அங்கத்தவர்கள் கிராமவாசிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் வன்னி பாதுகாப்பு படையினர் இவ்வாறான சமூக சேவை வேலைத் திட்டங்களை கிட்டத் தட்ட ஐந்து வருடங்களாக மேற்கொண்டு வருவதுடன் இப் புதிய வீடானது 12ஆவது முறையாக இப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் வீடானது வேலையில்லாத இரு பிள்ளைகளின் தந்தையான திரு சிரில் செனெவிரத்ன அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் இச் சமூக வேலைத் திட்டத்திற்கான அனுசரனையை திரு அருண தொரகும்புர அவர்கள் ஐடிஎன் அலைவரிசையுடன் ஒருங்கிணைந்து வழங்கியுள்ளார்.

இத் திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் 21ஆவது பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன மற்றும் 212ஆவது படைத் தலைமையக தளபதியான கேர்ணல் அணில் பீரிஸ் போன்றோரின் வழிகாட்டலில் 7ஆவது (தொண்டர்) பீரங்கிப் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமயகமானது கடந்த இரு வருடங்களில் 11புதிய வீடுகளை நிர்மானித்து தேவைநாடும் குடும்பங்களிற்கு வழங்கியதோடு இவர்களின் சமூக சேவைத் திட்டதின் மற்றுமோர் அங்கமாக 12ஆவது வீட்டை நிர்மானித்து வழங்குவதற்கான அடிக்கல்லை நாட்டிது. Adidas shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov