Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2019 12:04:35 Hours

பனை மரத்திலான உற்பத்தி பொருட்களுகு படையினரால் சந்தைப்படுத்தும் வசதி

கிளிநொச்சி பிரதேசத்தில் பனை மரத்திலுள்ள மூலப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான புதிய சந்தைப்படுத்தல் மற்றும் அவர்களின் வாழ்கைதரத்தை உயர்த்துதல் முதலிய நோக்கத்துடனான சந்திப்பானது கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களினால் கடந்த செவ்வாய் கிழமை 13 ஆம் திகதி 45 உள்ளுர் தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்றன.

மேலும், இந்த சந்திப்பின் போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குறித்த உற்பத்தியாளர்களின் புதிய நுட்பங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தினை புதிய தொழிலுநுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எவ்வாறு உயர்வடையச் செய்யமுடியும் என்பது பற்றி விளக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய உட்பட 66ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த திட்டமானது இராணுவ சிவில்- இராணுவ ஒத்துழைப்புடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தி, விற்பனை செய்வதன் நிமித்தம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது அந்த தயாரிப்பாளர்கள் தங்கள் கவலைகளையும் சிரமங்களையும் வெளிப்படுத்தினர், அத்துடன் தங்கள் தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதிலும், அவற்றை விற்பனை செய்வதில், வெவ்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதும் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். best Running shoes brand | Air Jordan Release Dates 2020