Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2019 19:12:02 Hours

மத ஸ்தலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்

சில மணித்தியாலங்களின் முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் வழக்கமான பயன ஆலோசனை (2ஆம் கட்ட) அறிவிப்பின் பிரகாரம் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் நீண்ட நாள் விடுமுறைகளின் நிமித்தம் தமது சுற்றுலாப் பயணத்தை இலங்கையில் மேற்கொள்ளும் சம்மந்தமான தகவலானது சில சமூக வலைத்தலங்களில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. ஆனால் மிகவும் சன நெரிசலான இடங்களில் மற்றும் பொது கூட்டமான இடங்களில் அவர்களின் நகர்வு தொடர்பாக பின்னர் கொழும்பு ஐக்கிய அமெரிக்க தூதரக தூதுவரினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு செயலாளரான ஜெனரல் (ஓய்வூ) சாந்த கோட்டேகொட அவர்கள்; எவ்வாறான நவீன மயப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் காணப்பட்டாலும் உலகில் எவ்வாறான நாடுகளிலிலும் 100 வீதமான பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலாது. அந்த வகையில் நாம் நாட்டின் பாதுகாப்பை மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அடிப்படையில் பாரிய விழாக்களான ஸ்ரீ தளதா மாளிளை பெரஹரா நிகழ்வு, தளவில மற்றும் நல்லூர் கோவில் போன்ற மதத் ஸ்தலங்கள் போன்றவற்றில் கூடும் பொது மக்களது பாதுகாப்பு போன்றவை நிகரான முறையில் அமைந்துள்ளது. மேலும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை பொது மக்கள் நம்பாது இருத்தல் வேண்டும். மேலும் பொது மக்கள் யாதாயினும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொதிகள் போன்றவற்றை கண்டால் உடனடியாக தெரிவித்தல் வேண்மென கண்டியில் இன்று காலை (04) இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரவர்கள் கண்டிக்கான விசேட விஜயத்தின் போது பொலிஸ் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள், விசேட பாதுகாப்பு படை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு முக்கியஸ்தர்களின் பங்கேற்றலுடன் வருடாந்த எசெல விழாவை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலை தியவடனநிலமே மற்றும் சதர தேவாலய பிரதம குருவர்களுடன் மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரவர்கள் ஊடக சந்திப்பை மேற்கொண்டு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பாதுகாப்பு தொடர்பாக பலவாறான கோணங்களில் கலந்துரையாடினோம்.

மேலும் கொழும்பில் இருமுறை மேற்கொள்ளப்பட்டதுடன் தற்போது ஸ்ரீ தளதா மாளிகையின் பாதுகாப்பானது 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நான் சந்தேகமின்னி தெரிவிக்கின்றேன். மேலும் இதன் போது கலந்து கொள்ளவிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புலனாய்வுத் துரையினர், முப்படையினர் ,பொலிஸ் திணைக்களம் போன்றவற்றிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில் குறுகிய காலப் பகுதியில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களது ஆணைக்கினங்க பயங்கரவாத குழுவினரின் வலயமைப்பை கண்டறிந்து அவற்றை இல்லாதொழித்தமைக்காக என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது ஐ.எஸ். பயங்கரவாதிகளினாலோ அல்லது வேறு வெளிநாட்டு சக்திகளினாலோ தொடர்புபட்டடுள்ளது என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் சஹ்ரானுடைய மற்றும் அவருடைய கருத்தியல் கொள்கையானது நிச்சயமாக தாக்கத்தை செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் தேசிய பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம் ‘’ பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் இலங்க வாழ் மக்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் மீதான பொதுப் பாதுகாப்பை மேற்கொண்டுள்ளது. யாரவது இந்நாட்டிற்கு வர விரும்பினால் எதுவித பயமுமின்றி வரலாம் என தெரிவித்தார். Sports brands | Nike Shoes