Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2019 22:34:02 Hours

தேசிய சொட்கன் சம்பியன்சிப் போட்டிகள் – 2019

இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல அவர்களது தலைமையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய சொட்கன் சம்பியன்சிப் போட்டிகள் ஜூலை மாதம் 26 – 28 ஆம் திகதிகளில் பானொலுவ பிஸ்டல் சூட்டுப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் முதலாவது இடத்தை பிரிகேடியர் செனரத் நிவுன்ஹலையும், இரண்டாவது இடத்தை பிரிகேடியர் கித்சிரி ஏகநாயகவும், மூன்றாவது இடத்தை சுபஹாஷான வெலிகல அவர்களும் பெற்றிருந்தனர்.

நாடாளவியல் ரீதியாக விளையாட்டு கழக துப்பாக்கி சூட்டு வீரர்கள், முப்படை மற்றும் பொலிஸ் வீர வீராங்கனைகள் 120 போட்டியாளர்களின் பங்களிப்புடனும் விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

இராணுவ ஆண்களுக்கான போட்டிகளில் முதலாவது இடத்தை ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 W.P. N தம்மிக, இரண்டாவது இடத்தை ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 M.M.N கொஷ்வத்தயும், அனைத்து திறந்த துப்பாக்கி சூட்டுப் போட்டியில் லெப்டினன்ட் துஷார குணதிலக அவர்கள் பங்கேற்றிக் கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவ பெண்களுக்கான போட்டிகளில் முதலாவது இடத்தை லெப்டினன்ட் சாலிக லியனாரச்சியும், இரண்டாவது இடத்தை போர் வீராங்கனை K. கௌசல்யாவும், அனைத்து திறந்த துப்பாக்கி சூட்டுப் போட்டியில் லெப்டினன்ட் அனுபாமா ரத்னாயக அவர்கள் பங்கேற்றிக் கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டிற்கான தேசிய சொட்கன் சம்பியன்சிப் போட்டியானது வெலிசரவிலுள்ள கடற்படை சூட்டுப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இதிலும் எமது இராணுவ அணியினர் பீ குழுவின் கீழ் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics footwear | Nike Shoes, Sneakers & Accessories