Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2019 12:05:02 Hours

வன்னி கண்டுபிடிப்பு கண்காட்சி - 2019 புதிய 36கண்காட்சிக் கூடங்களோடு ஆரம்பம்

படையினரின் திறமையை வெளிக்கொனரும் வகையில் இடம் பெரும் வருடாந்த வன்னி கண்டுபிடிப்பு கண்காட்சி - 2019 பராக்கிரமபுர பதவிய பொது மைதானத்தில் கடந்த 26 மற்றும் 27ஆம் திகதிகளில் ஜூலை மாதம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் வட மத்திய மாகானத்தில் உள்ள 21 54 56 61 மற்றும் 62ஆவது படைப் பிரிவுகள் மற்றும் முன்னரங்க பாதுகாப்பு வலய படையினரின் ஒத்துழைப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கண்காட்சியில் 36 கண்காட்சிக் கூடங்கள் வன்னிப் படையினரின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்தப்பட்டதோடு இதற்கான ஒழுங்குகளை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் போன்றோர் மேற்கொண்டனர்.

மேலும் இவ் முப்பத்து ஆறு கண்காட்சிக் கூடங்களில் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் தேடுதல் மற்றும் மதிப்பீட்டு பிரிவின் கேர்ணல் எஸ் டீ உதயசேன ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான திரு பூபாலசுந்தரம் ஐங்கரன் மற்றும் திரு ஜி சசிகேஷ் போன்றோரால் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் முதலாமிடமானது எயார் ஜெனரேட்டர் கண்டுபிடிப்பிற்காக 2ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே டீ வீரசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இரண்டாமிடமானது அதி வேக சமிக்ஞை வலையமைப்பிற்காக 15ஆவது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் யு ஜி டபிள்யூ என் ஜயதிலக அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் மூன்றாமிடமானது தன்னிச்சையாக செயற்படும் வாகன சோதனை உத்திக்காக 14ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம் ஜி பி கே ரத்தினசிறயவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப் பாரிய கண்டுபிடிப்பு கண்காட்சி நிகழ்வானது 62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஜெ எம் யூ டீ ஜயசிங்க அவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமைய உயர் அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் அரச அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற பாரிய அளவிலான நபர்கள் கலந்து கொண்டனர்.best Running shoes brand | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News