Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2019 23:01:04 Hours

கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் படையினரால் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம், 64, 643 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உலருணவு பொருட்கள் இம் மாதம் (27) ஆம் திகதி வழங்கப்பட்டன.

படையினரால் 2000/= ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் முத்தியன்கட்டுகுளம் கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள கர்ப்பினி தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W.D.C.K கொஷ்தா அவர்களால் இந்த உலருணவு பொருட்கள் இந்த தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் சொந்த நிதி அனுசரனையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.jordan release date | FASHION NEWS