Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2019 16:57:59 Hours

யாழ் படைத் தளபதி 52 ஆவது படைப் பிரிவிற்கு விஜயம்

புதிதாக பதவியேற்ற யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசேகர அவர்கள் 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (24) ஆம் திகதி மேற்கொண்டார்.

படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட யாழ் படைத் தளபதியை 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் S.S வடுகே அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இங்கு வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.trace affiliate link | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff