Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2019 12:03:09 Hours

கிறிஸ்துவ தேவாலய திருவிழாவிற்கு படையினரால் குடிநீர்கள் விநியோகம்

முழங்காவில் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புனித மரியாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது. அதன் போது இராணுவத்தினரால் குடிநீர்கள் போத்தல்கள் மற்றும் தண்ணீர் பவுசர்களின் மூலம் தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்கி வைத்தனர்.

இந்த பணிகள் 651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 (தொ) கஜபா படையணியின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் ஏற்பாட்டில் அரவிளந்தன்குளம் ஜி டி எம் பாடசாலை வளாகத்தினுள் 35 படை வீரர்கள் மற்றும் 12 சிவிலியன்களது பங்களிப்புடன் சிரமதான பணிகள் இம் மாதம் (19) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே ஏ டப்ள்யூ குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது. Sport media | Nike Shoes