Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2019 10:17:37 Hours

மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களுக்கு இராணுவ கௌரவ மரியாதைகள்

இலங்கை இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் இராணுவத்தில் 30 வருட சேவைக் காலங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்ல உள்ளமையால் இவருக்கு சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை கஜபா படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் வரவேற்று இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் தலைமையக வளாகத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டார்.

இவர் முதலில் கஜபா படையணி தலைமையகத்தினுள் அமைந்திருக்கும் கஜபா படையணியின் பிதாவான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவு தூபிக்கு சென்று அஞ்சலியை செலுத்தினார்.

பின்னர் தலைமையகத்தில் அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்ற தேநீர் பிரியாவிடை நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

மேலும் அன்றைய தினம் இந்த உயரதிகாரிக்கு தலைமையக அதிகாரி விடுதியில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்வில் பதவி நிலை பிரதானியும், கஜபா மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர. affiliate tracking url | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat