Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2019 19:58:34 Hours

மாதுறு ஓயாவில் 319ற்கும் மேற்பட்ட விசேட படையினரின் வெளியேற்ற நிகழ்வு

இராணுவத்தின் விசேட படையணியினரின் 'அதிஷ்டானயென் அபீதவ அரமுன கர' எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக 49ஆம் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்ட 04 அதிகாரிகள் மற்றும் 315 படையினர் போன்றோருக்கான வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (22) காலை மாதுறு ஓயாவில் அமைந்துள்ள விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்றது.

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்ன அவர்கள் விசேட படையணி தளபதியும் இராணுவ படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்.

அந்த வகையில் இவ் ஒன்பது மாத கால கடுமையான பயிற்சியின் போது சிறு நடவடிக்கைப் பயிற்சிகள் எதிரிகளை எதிர்கொண்டு எவ்வாறு தம்மை வனத்தில் பாதுகாத்துக் கொள்ளல் போன்ற பயிற்சி முறைகள் இதன் போது வழங்கப்பட்டன. அந்த வகையில் இராணுவத்தின் விசேட படையணி மற்றும் கெமாண்டோ படையணி போன்றன பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆள் ஊடுருவித் தாக்கும் சிறப்பம்சத்தை உடையதாக காணப்பட்ட படையணியாகவும் பயங்கரவாதிகள் அஞ்சக் கூடிய வகையில் இப் படையணியானது செயற்பட்டுள்ளது. மேலும் இப் படையணியால் நீண்டதூர மறுமதீப்பீட்டு நகர்புர பாதுகாப்பு பயணக்கைதிகள் மீட்பு விசேட அதிதிகளுக்கான பாதுகாப்பு விமான தாக்குதல் மற்றும் கடலினூடாக ஊடுருவித் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டன.

அந்த வகையில் விடேச படையினர் கடந்த கால மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எல் ரீ ரீ ஈ பயங்கரவாதிகளின் சிறு குழுக்களை தாக்கும் நோக்கில் எதிரிகளின் சுமார் 30 முறை 50 கிமீ வரை காணப்பட்ட பாதுகாப்பு வலயத்தை தாக்கினர். அந்த வகையில் இப் படையணியில் 1985ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கையில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) காமிணி ஹெட்டியாராச்சி அவர்கள் சிறப்புடன் பங்காற்றினார்.

இதன் போது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணவர்தன அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் அணிவகுப்பு கட்டளை அதிகாரியவர்கள் மேஜர் ஏ டபிள்யூ பதிரன அவர்கள் அணிவகுப்பிற்கான மரியாதை நிகழ்வை மேற்கொண்டார். இதன் போது வெளியேற்ற நிகழ்விற்கான படையினரின் பதங்கங்கள் மற்றும் சின்னங்கள் போன்றன அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணவர்தன் மற்றும் இராணுவத் தளபதியவர்களால் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இப் பயிற்சிகளில்; செக்கன் லெப்டினன்ட் எம் ஏ டீ வுன்ட்வார்ட் சிறந்த படை வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ ஏ எஸ் ஷிரந்த மற்றும் சிறந்த உடற்கட்டமைப்பாளரான கோப்ரல் ஈ வி டீ சோமசிறி மற்றும் அத்தடன் லான்ஸ் கோப்ரல் ஈ வி டீ சோமசிறி சிறந்த துப்பாக்கி சூட்டாளராக சிறந்து விளங்கினார்.

இவ் விசேட நிகழ்வில் பல திறமைகளை படையினர் வெளிப்படுத்தியுள்ளதுடன் மற்றும் சண்டைப் பயிற்சிகள் கேளிக்கை வினோத நிகழ்வுகள் போன்றன மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு படையினரின் ஒழுக்கம் தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். மேலும் உயிர் நீத்த படையினருக்கான மௌன அஞ்சலியும் பிரதம அதிதியவர்களால் வழங்கப்பட்டது.

இதன் போது விசேட படையினரின் ஆர்பாட்டம் தொடர்பான தெளிவான விளக்கம் மற்றும் இராணுவ கலாச்சார படையினரால் கேளிக்கை வினோத நிகழ்வுகள் போன்றன இடம் பெற்றன. அதே வேளை அட்மிரால் சவீந்திர சி விஜேகுணவர்தன அவர்கள் தமது வருகையை முன்னிட்டு விசேட படையினரின் மூலிகை தோட்டமான (ஒசு உதான) எனும் இடத்தில் மரக் கன்றை நட்டார். மேலும் இப் படையினரின் பெற்றோரை சந்தித்து உரையாடிய பிரதம அதிதியவர்கள் அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பாக வினவினார்.

இந் நிகழ்வில் இராணுவ தளபதி உள்ளடங்களாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி உயர் அதிகாரிகள் பெற்றோர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.bridgemedia | NIKE HOMME