Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2019 08:03:59 Hours

மேஜர் ஜெனரல் பலிஹக்கார அவர்களது பிரியாவிடை நிகழ்வு

இலங்கை இராணுவ நித்திய சேவையிலிருந்து 35 வருடங்களை பூர்த்தி செய்த இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களுக்கு இம் மாதம் (14) ஆம் திகதி படைத் தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த இராணுவ உயரதிகாரி இலங்கை இராணுவ நித்திய படையணியில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இணைந்து 2017 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவர் இராணுவத்தில் ஆற்றிய சேவைகளை கௌரவித்து இவருக்கு விசிஷ்ட சேவா விபூஷனம், உத்தம சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் சமயத்தில் இவர் பிரதி பதவிநிலை பிரதானியாக கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை தளபதியாகவும், படையணியின் தராதர பயிற்சி பாடசாலைகளின் உயர் பதவிகளிலும், படைத் தலைமையகங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பட்ட முன்னேற்றங்களில் பாரிய ஊக்குவிப்வை வழங்கி வைத்தார்.

மேலும் படைத் தலைமையக வளாகத்தினுள் ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த உயரதிகாரியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ ஞாபகார்த்த நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் நீத்த படை வீர்ர்களை கௌரவித்து அஞ்சலிகளை செலுத்தினார்.

பொது சேவைப் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் சி கே ஹந்துன்முல்ல உட்பட தொண்டர் படையணி, நித்திய படையணி அதிகாரிகள் படைவீர ர்கள் அனைவருடன் குழுப் புகைப்படத்தில் இணைந்தார்.

1951 முதல் 2019 வரையிலான படைப்பிரிவின் பெருமைமிக்க வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்காக வெளியிடப்பட்ட 'ரணவீரு புஹுமன் - 2019' ஆம் ஆண்டிற்கான சஞ்சிகை பிரதம ஆசிரியர் பிரிகேடியர் புவனேகா குணரத்ன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. Sports Shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth