Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2019 18:39:24 Hours

வில்பத்து மறுமலர்ச்சிக்கு நத்தான்டி மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் மரநடுகை திட்டத்திற்கு உதவியளிக்கும் முகமாக நத்தான்டி தம்மிஷர தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் (12) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளனர்.

இந்த பாடசாலையின் 106 ஆவது வருடாந்த பூர்த்தி தினத்தை முன்னிட்டு 5000 மரக்கன்றுகள் இப்பாடசாலை நிருவாகத்தினரால் வில்பத்து மறுமலர்ச்சி திட்டத்திற்காக இராணுவ தளபதிக்கு கையளிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தின் போது பாடசாலையின் அதிபர் திரு எஸ் ஏ அனில் புஸ்பகுமார, உப அதிபர் செல்வி டப்ள்யூ பீ என் பி ரொட்ரிகோ, (9-11) பிரிவின் தலைவர் திரு ஜே ஏ பி சி ஜயசிங்க, பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு ஆர் ஆர் எம் ஹஷித ராமநாயக, மாணவ தலைவி செல்வி ஏ எம் கே எம் எச் கருணாதிலக, இப்பாடசாலையின் பழைய மாணவர் மேஜர் டி ஜயசேன அவர்கள் இணைந்து கொண்டனர்.

கும்புக், மீ, பலா, மா போன்ற மரக்கன்றுகள் வில்பத்து மரநடுகை திட்டங்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

நல்லெண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மரநடுகைத் திட்டமானது பயண்படும் முகமாக இந்த பொறுப்பை அரசினால் இராணுவத்திடம் பாரமளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இந்த மரநடுகைத் திட்டத்திற்கு உங்களது பாடசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றிகளையும் இராணுவ தளபதி அவர்கள் தெரிவித்தார். latest Nike release | FASHION NEWS