Header

Sri Lanka Army

Defender of the Nation

11th June 2019 17:21:23 Hours

புகழ்பெற்ற போர் வீரர்களுக்காக அராலியில் நினைவு தூபிகள் அமைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் நாட்டிற்காக பாரிய சேவைகளை ஆற்றி உயிர் நீத்த இராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் டென்ஷில் கொப்பேகடுவ மற்றும் ஏனைய அதிகாரிகளை நினைவு கூறும் முகமாக நினைவு தூபிகள் அராலியில் அமைத்து திறந்துவைக்கப்பட்டன.

இந்த நினைவு தூபிகள் யாழ் பாதுகாப்பு படைத் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டிட நிர்மான பணிகளுக்கான நிதி அனுசரனைகள் திருமதி இந்திரா திசாநாயக அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்த நினைவு தூபி திறப்பு நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவபடுத்தி பிரதம அதிதியாக வடக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டீ ஜே ஐ பி கமகே அவர்கள் வருகை தந்து இந்த நினைவு தூபிகளை திறந்து வைத்து மரியாதை அஞ்சலிகளையும் செலுத்தினார்.

இந்த நிகழ்வு இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெற்றதுடன் இந்த நினைவு தூபி வளாகத்தினுள் முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதியின் விஜயத்தை அடையாளப்படுத்தும் முகமாக மரக்கன்றொன்றும் முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதியினால் நடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி எமது நாட்டின் சிறந்த போர் வீர ரான லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ மற்றும் சக இராணுவ உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மோகன் ஜயமஹா, லெப்டின ன்ட் கேர்ணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேர்ணல் ஜி எச் ஆரியரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் வயி என் பலிபான, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேர்ணல் நலீன் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி பீ விஜயபுர. மற்றும் சாதாரன போர் வீரன் டப்ள்யூ. ஜே விக்ரமசிங்க போன்றோர் யாழ் அராலி பகுதியில் வைத்து கன்னவெடி தாக்குதலுக்கு இலக்காகி பலியாகினார்கள். இவர்களை நினைவு கூறும் முகமாக இவர்களின் புகைப்படங்களுடன் இந்த நினைவு தூபிகள் இந்த நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. latest jordan Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%