Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2019 09:37:13 Hours

நாட்டிற்காக தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு படுத்தி நூல் வெளியீட்டு விழா

நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

நிகழ்வின் முதல் அங்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

பின்னர் மங்கள விளக்கேற்றி (2009 – 2019) ஆண்டு வரையான 10 ஆண்டு வருடங்களை நினைவு கூறும் தேசிய தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் “உத்தமச்சார” நூல் மேன்மே தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இந்த நிகழ்வின் ஊடாக கையளிக்கப்பட்டன.

அத்துடன் விஷேட நாணயம் மற்றும் முத்திரை வெளியீடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் இராணுவ தளபதியின் பணிப்புரையின் கீழ் ஆளனி நிருவாக பணியகத்தின் பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டதுடன் தேசிய போர் வீரர்களின் தியாகங்களை விவரிக்கும் வீடியோ கண்காட்சியும் இச்சமயத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் “உத்தமச்சார” நூல் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த நிகழ்வினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இராணுவ தளபதி அவர்களினால் மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ரூபாய் காசோலையும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. Nike footwear | Women's Sneakers