Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2019 22:00:33 Hours

நாடளாவிய ரீதியில் இராணுவப் படையினரால் பிரதிபத்தி பூஜா நிகழ்வுள்

பனாகொடை ஸ்ரீ போதி ராஜாராம விகாரையில் இலங்கை இராணுவத்தால் வெசாக் தின நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (18) பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக பாரிய அளவிலான மக்களின் பங்கேற்றலுடன் மிக விமரிசையாக இடம் பெற்றது.

மேலும் இவ் வெசாக் தின நிகழ்வில் 2000 பக்தர்கள் கலந்து கொண்டதோடு இந் நிகழ்;வுகள் இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே மற்றும் இராணுவ பௌத்த மத சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

இதன் போது இராணுவ படையினர் மற்றும் போரின் போது உயிர் நீத்த படையினர் போன்றவர்களுக்கான ஆசிகள் வழங்கப்பட்டது.

அதே வேளை கொழும்பு இராணுவ வைத்தியசாலையானது வெசாக் கூடுகளை காட்சிப் படுத்தியதுடன் வெசாக் தின நிகழ்வுகளை முன்னெடுத்தது.

அதேவேளை அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் படைப் பிரிவுகள் பயிற்றுவிப்பு நிலையங்கள் முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்புடன் வெசாக் தின நிகழ்வுகளை முன்னிட்டு சில் வழிபாட்டு நிகழ்வுகள் தான தர்ம நிகழ்வுகள் சிரமதானப் பணிகள் இரத்ததான நிகழ்வுகள் வெசாக் வெளிச்சக் கூடுகள் வெசாக் தின பக்திப் பாடல்கள் மனிதாபிமான சேவைப் பணிகள் போன்றன மேற்கொள்ளப்பட்டன. இதன் போது பல்லாயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகள் படையினர் தமது ஒத்துழைப்பை இந் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான வழங்கியிருந்தனர். கடந்த சனிக் கிழமை (18) இந் நிகழ்வுகள் படைத் தலைமையக தளபதிகள் மற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலில் இடம் பெற்றன.Authentic Sneakers | Air Jordan