Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2019 12:26:39 Hours

இராணுவ தளபதியினால் புலமைபரிசு உட்பட தேவையான நிர்வாகம் மற்றும் சேவைகளின் வசதிகள் நிமித்தம் கட்டிடம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் 591 ஆவது படைப் பிரிவு மற்றும் 593 ஆவது படைப் பிரிவில் சேவையில் இருக்கும் இராணுவத்தினரின் நீடித்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிமித்தம் நிர்வாகம் மற்றும் படையினர் விடுதி உட்பட அனைத்து தேவைகளுக்குமான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த (18) ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்துகொண்டார். அதன்படி இப்பகுதி முழுவதும் பல சமூக நல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கமைய அதிகமாக முல்லைத்தீவு பிரதேசத்தின் கடமையில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் உட்பட அதிகமான படையினரும் கலந்து கொண்டன.

முதலாவதாக, இராணுவ தளபதி அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற் கொண்டார். இப் படைப் பிரிவிற்கு வருகை தந்த இராணுவ தளபதியை 59 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 59 ஆவது படைப் பிரிவின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 59 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீடித்த தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி விடுதி மற்றும் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சார்ஜன் விடுதிகளை திறந்து வைக்கும் நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 59 ஆவது பாடைப் பிரிவின் கட்டளை தளபதி அனைவராலும் இராணுவ தளபதி அழைத்து செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து நினைவு பலகையை திறந்து வைத்த இராணுவ தளபதி அவர்கள் அதிகாரிகள் மற்றும் ஆணைச்சீட்டு அதிகாரிகளுடன் இணைந்து ரிபன்வெட்டி இக் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் இப் படைப் பிரிவு வளாகத்தில் சந்தன மரக்கன்றும் நற்றுவைத்தார். பின்னர் இராணுவ தளபதியின் விஜயத்தின் ஞாபகமாக அனைத்து படையினர்களும் இராணுவ தளபதியுடன் குழு புகைப் படத்திலும் கலந்து கொண்டதுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இராணுவ தளபதி அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் 64 ஆவது படைப் பிரிவு மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகள் மற்றும் படையினரும் கலந்துகொண்டன.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் 593 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்ததுடன் இப் படைப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி விடுதியை திறந்து வைத்தார். அத்துடன் இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த இராணுவ தளபதியை இப் படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களால் வரவேற்கப்பட்டார் .அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி 593 ஆவது படைப் பிரிவில் இருந்து வெளியேறுவதற்கு முன் விருந்தினர் புத்தகத்தில் தனது உத்தியோகபூர்வ கையொப்பமிட்டார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் 591 ஆவது படைப் பிரிவுக்கு விஜயத்தை மேற்கொண்டு 591 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் சுராஜ் பெரேரா அவர்களின் ஆலோசனைகமைய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட படைப் பிரிவின் புதிய அலுவலகம் தளபதியவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றலுடன் இப் படைப் பிரிவு வளாகத்தில் மரக் கன்றும் நடப்பட்டது. பின்னர் இராணுவ தளபதியின் விஜயத்தின் ஞாபகமாக அனைத்து படையினர்களும் இராணுவ தளபதியுடன் குழு புகைப் படத்திலும் கலந்து கொண்ட அவர் விருந்தினர் புத்தகத்தில் தனது உத்தியோகபூர்வ கையொப்பமிட்டார்.அதன் பின்னர் சாதாரன உயர்தரத்தில் பரிட்சையில் அதிகபுள்ளிகளை பெற்ற முன்று மாணவர்களுக்கு இராணுவ தளபதி அவர்களின் தலைமையின் 591 ஆவது படைப் பிரிவு கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பல்கலைகழத்தில் கல்வியை தொடர தகுதி பெற்ற மாணவர்களான வி.விதுஷா, டி.அபிஷான் மற்றும் வி.தினுஷான் ஆகியோர்களுக்கு அவர்களின் எதிர்கால கல்வியை தொடர்வதற்கு நன்கொடையாக முல்லியவேலி வித்தியானந்த வித்தியாலயத்தின் அதிபர் பொன்னம்பலம் ஜோன்ராஜ் அவர்களால் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இராணுவ சேவா வனிதா பிரிவினரால் மதத்திற்கு ரூபா 5000/= வழங்கப்பட்டது.

இந்த நன் கொடை வழங்கும் நிகழ்விற்கு அதிபர் ஆசிரியர் மாணவர்கள் இராணுவ அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டன. பின்னர் அனைவரும் இராணுவ தளபதியுடன் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டன.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற் கொண்டார். அதன் படி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குட்பட்ட 23 பிரிவுகளின் பங்களிப்புடன் (Knowledge is Power) ஏனும் தொனிப் பொருளின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் சேவையில் இருக்கும் அதிகாரிகளின் திறமைகளை மேன்படுத்தி கொள்ளும் நிமித்தம் 59 ஆவது படைப் பிரிவினார்களால் ஓழுங்கமைக்கப்பட்ட (Inter Battalion Quiz Competition – 2019) படைப் பிரிவுகளுக்கு இடையிலான அதிகாரிகள் கேள்வி -2019 க்கான நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன. அந்த வகையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 23 குழுக்கள் கலந்து கொண்டன. அத்துடன் இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதல்கள் இராணுவ தளபதி அவர்களால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இப் போட்டி இறுதியில் 23 ஆவது விஜபாகு காலாட்படை படையணி குழுவினர் மற்றும் 6 ஆவது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியினர் போட்டியிட்டதில் 6 ஆவது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி வெற்றிபெற்றதுடன் 23 ஆவது விஜபாகு காலாட்படை படையணி இரண்டாம் இடத்தை பெற்றன. மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குட்பட்ட பிரிவுகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் சேவையில் இருக்கும் ஜூனியர் தலைவர்கள் மற்றும் காலாட்படைகளின் தரம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் நோக்கத்தில் 68 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட படையினரின் உடல் உடற்பயிற்சி கைவினை நுட்பங்கள், தந்திரோபாயங்கள், நேரடி துப்பாக்கி சூடு, மற்றும் அணிவகுப்பு போன்றவற்றின் தெரிவு செய்யப்பட்டதில் (Best Section Selection Competition) 23 ஆவது விஜபாகு காலாட்படை படையணி சிறந்த பிரிவில் தேர்வு வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகள் படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இராணுவ தளபதியை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டதுடன் அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இராணுவ தளபதி அவர்கள் அன்று இரவு 59 ஆவது படைப் பிரிவு அதிகாரி விடுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட இரவு விருந்துபுசாரத்தில் கலந்து கொண்டதுடன் நினைவு சின்னங்களும் பாரிமாறப்பட்டன. Running sneakers | Nike Air Max 270