Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2019 10:34:47 Hours

நவீன மயப்படுத்தப்பட்ட வசதிகளுடன் கணேமுல்லை கொமாண்டோ படைத் தலைமையகம் திறந்து வைப்பு

கணேமுல்லை பிரதேசத்தில் உள்ள கொமாண்டோ படைத் தலைமையகம் நவீன மயப்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் இக் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நோக்கில் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இராணுவத் தளபதியவர்கள் பிரதம அதிதியாக கடந்த புதன் கிழமை (03) கலந்து கொண்டார்.

இக் கட்டடத் தொகுதியில் புதிய சமையல் அறைகள் மற்றும் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட்களுக்கான புதிய மூன்று மாடிக் கட்டடமானது இப் படைத் தலைமயகத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் கொமாண்டோ படையணியானது 39வருட கால வரலாற்றை பெற்றுக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடமானது மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களின் தலைமையில் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாhநாயக்க அவர்கள் கொமாண்டோ படையினருடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் பிரதம அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன் ஆணைச் சீட்டு அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் போன்றோருடனான இரவு நேர விருந்துபசாரத்திலும் அவர் கலந்து கொண்டார். அத்துடன் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக தளபதியவர்கள் கலந்துரையாடினார்.

அந்;த வகையில் கொமாண்டோ படையினர் இராணுவ பொறியியலாளர் சேவைப் படையினரின் வழிகாட்டலின் கீழ் தமது கட்டடத்தை நிர்மானித்து நிறைவு செய்தனர்.

இதன் போது கணேமுல்லை கொமாண்டோ படைத் தலைமையகத்திலிருந்து இராணுவத் தளபதியவர்கள் விடைபெறும் முன்னர் மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை பரிசளித்தார்.

இந் நிகழ்வில் பிரிகேடியர் பிரியந்த செனெவிரத்தின நடவடிக்கைப் பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் உபாலி ராஜபக்ச பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் - மேற்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் பிரிகேடியர் உதிர் பண்டார கொமாண்டோ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அணில் சேமாசிறி கொமாண்டோ பயைணியின் மத்திய தளபதியான கேர்ணல் ஏ எஸ் பி சில்வா மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். latest Nike release | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ