Header

Sri Lanka Army

Defender of the Nation

28th March 2019 08:48:09 Hours

இராணுவ தளபதியின் பங்களிப்புடன் BMICHஇல் இடம்பெற்ற 'பொறியியல் சிறப்பு விருதுகள்' நிகழ்வு

இலங்கையில் ஆண்டுதோறும் 'பொறியியல்' துறையில் சிறந்து விளங்கிய பௌதிகவியல், நடைமுறை நிபுணர்களுக்கான வெகுமதிகள், சிறந்த விருந்தினர்களை தேர்ந்தெடுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான 'பொறியியல் சிறப்பு விருதுகள்' நிகழ்வு இம் மாதம் (27) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இவரை IESL நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் (பேராசிரியர்) டி.எம் பல்லேவத்த அவர்கள் வரவேற்றார்.பின்னர் பிரதம அதிதிஅவர்களினால் மங்கள விளக்குகள் ஏற்றி அவரை உரை ஆற்றுவதற்கு மேடைக்கு அழைக்கப்ட்டார்.

இராணுவ தளபதியின் உரையின் பின்பு 2018 ஆம் ஆண்டிற்கான 'பொறியியல் சிறப்பு விருதுகள்'இராணுவ தளபதி அவர்களினால் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளில் 'எமினென்ஸ்', 'பொறியியல் விருதுகள்' சிறப்பு விருதுகள் ,சிறப்பு பாராட்டு விருதுகள் ,பார்ட்னர் பொறியாளர் ,பட்டயப் பொறியியலாளர் விருதுகள் ,பொறியியல் ஊடக விருதுகள், பொறியியல் தொழில்முனைவோர் விருது' உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி உரையாற்றும் போது ஐ.எஸ்.இ.எல் பொறியியல் நிறுவனத்தின் தொழில்முயற்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பங்களிப்பை அதிக அளவில் பராட்டினார். அத்துடன் நாடு செழிப்பு மற்றும் விரைவான வளர்ச்சிக்கு அணிவகுத்து வருகின்ற நிலையில் பல துறைகளில் பரவலாக இந்த நிறுவனம் காணப்படுகிறது. உதாரணமாக வர்த்தகத்தில் எமது நாட்டிற்கும் வெளிநாடுகளில் இருந்து பெருமைகளைபெற்றுத்தந்துள்ளது எனும் விடயத்தை குறிப்பிட்டார்.

பொறியியல் பேராசிரியர் பல்லேவத்த அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்தார். அத்துடன் ஐ.ஈ.எஸ்.எல. நிறுவனத்தின் பாராட்டு புத்தகத்திலும் இராணுவ தளபதி அவர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிட்டார்.

1906 ஆம் ஆண்டில் ஐ.எஸ்.எஸ்.எல் நிறுவனமாக பெயர் மாற்றுவதற்கு முன்னர் இந்த நிறுவனம் இலங்கை பொறியியல் சங்கமாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஐ.இ.எஸ்.எல் இணைந்ததன் பின்னர் சர்வதேச நிபுணத்துவ பொறியியலாளர்கள் ஒப்பந்தத்தில் உறுப்பினராக பங்களித்து ஐ.இ.எஸ்.எல், அதன் தொழில்முறை நடைமுறைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. Buy Sneakers | Footwear