Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2019 09:42:45 Hours

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி தியதலாவையில் இன்று ஆரம்பம்

இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஒன்றினைந்து ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இன்று (26) ஆம் திகதி தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாவதற்கு உள்ளது.

இந்த பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 120 பேர் பங்கேற்றுக்கொள்வர். வருடாந்த இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் இராணுவ தந்திரஉபாய அறிவுகள், இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முறைகள், ஆழுருவி நீண்ட தூர உளவு ரோந்துமுறைகள், சிறு குழு நடவடிக்கைகள், காலாட்படை ஆயுதங்களின் பயனுள்ள வேலை, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள், குண்டுகள் தகர்க்க வைக்கும் முறைகள் போன்று விடயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படவுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களது கண்காணிப்பின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபத்திரன அவர்களது தலைமையில் இந்த பயிற்சிகள் இடம்பெறும்.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளான கேர்ணல் பார்தசாரதி ரோய், கேர்ணல் சொம்பிட் கோஷ், மேஜர் மன்ஹாஷ் மற்றும் மேஜர் ரோகித் குமார் திரிபாதி நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த சமயத்தில்கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து கூட்டுப் பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் குமார பதிரன அவர்களால் இந்த அதிகாரிகள் வரவேற்கப்பட்டார்கள். பின்னர் இந்த இந்திய இராணுவ அதிகாரிகள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்கு சென்று தங்களது கௌரவ மரியாதை அஞ்சலிகளை செலுத்தினர். Best Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov