Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 08:24:22 Hours

கிளிநொச்சி படையினருக்கு “அங்கம்பொர” தற்பாதுகாப்பு போர் பயிற்ச்சிகள்

சில மாதங்களாக “அங்கம்பொர” தற்பாதுகாப்பு பயிற்ச்சிகளை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி இராணுவப் படையினர்கள் முதலாவது முறையாக கடந்த (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை “ராவணா ரணகேலி” எனும் சம்பிரதாய பூஜையுடன் வண்ணமயமான பாரம்பரிய அங்கம்பொர போர் பயிற்ச்சிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சமர்பிக்கப்பட்டது.

அதன்படி, பல ஆண்டுகளாக பாரம்பரியமாக பயிற்றுவிக்கப்பட்ட “அங்கம்பொர” தற்பாதுகாப்பு பயிற்ச்சிகளை ஆரம்பிக்கும் முன் விசேஷ பூஜை வழிப்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் இப் பயிற்ச்சிகள் சிங்கக்கார ராஜ வம்சத்தின் கலா விபுஷண தேவிந்த லக்சிறி ரணசிங்க, தனது குழுவினருடன் ஆதரவுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளின் படையினர்கள் 55 பேர்களுக்கு “அங்கம்பொர” தற்பாதுகாப்பு போர் பயிற்ச்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்கள் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி பாதுகாப்பு படையினருக்கு “அங்கம்பொர” தற்பாதுகாப்பு போர் பயிற்ச்சிகளை பயிற்ச்சியை பெற்றுக்கொடுத்தமைக்கு பிரதான அதிதி அவர்கள் கலா விபுஷண தேவிந்த லக்சிறி ரணசிங்க அவர்கள் உட்பட குழுவினர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.trace affiliate link | adidas Yeezy Boost 350