Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 10:24:22 Hours

பூநேரின் படையினரின் இரத்த தான நிகழ்வு

கிளிநொச்சியிலுள்ள மாகாண இரத்த வங்கியின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி 66 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 70 இற்கும் அதிகமான படைவீரர்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நோயாளர்களின் தேவையினை பூர்த்தி செய்யுமுகமாக 66 வது படைப் பிரிவின் தலைமையளத்தில் வைத்து இரத்த தானம் செய்துள்ளனர்.;

மேலும், கிளிநொச்சியிலுள்ள மாகாண இரத்த வங்கியானது, இரத்த பற்றாக்குறையினை கிளிநொச்சி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகர அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து, 66 வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களினால் இவ் மனிதாபிமானமான செயற்பாடானது ஒழுங்கமைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் எச்.எம்.டி.பி.ஹின்டகொட மற்றும் அவர்களின் குழு பூநேரின்வில் அமைந்துள்ள 66 வது படைப் பிரிவிற்கு வருகை தந்து குறிப்பிட்ட இரத்த சேகரிப்பினை பெற்றுக் கொண்டனர். Sports brands | Klær Nike