Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2018 13:47:43 Hours

முல்லைத்தீவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ படைப் பிரிவு மற்றும் சிவில் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான டி 20 கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாயாரு 593 ஆவது படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் (19) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்தார். இவரை 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிக ஜயசூரிய அவர்கள் வரவேற்றார்.

இந்த போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 16 சிவில் கிரிக்கட் கழகங்கள் பங்கேற்றியதுடன் உதயன் கிரிக்கட் கழகம் திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

அத்துடன் இராணுவ படைப் பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் 59 ஆவது படைப் பிரிவு திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டிகள் அனைத்தும் மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரனையுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

கிரிக்கட் போட்டிகளில் திறமைகளை வெளிக் காட்டிய விளையாட்டு வீரர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் முகாமையாளர் நலின் ஜயசூரிய மற்றும் 593 ஆவது படைத் தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களின் பங்களிப்புடன் வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. Buy Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092