Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2018 16:22:36 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மத குருமார்கள், பிபிதெனு பொலனருவை திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் முன்னரங்க பாதுகாப்பு தலைமையக தளபதியை சந்திப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர அவர்கள் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இப் பிரதேசத்தில் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டு மத குருமார்கள் மற்றும் பல பங்குதாரர்கள் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படைப் பிரிவுகளின் கட்டளை தளபதிகளையும் சந்தித்துள்ளார்.

அதற்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் மதத்திற்கு அதிக கவனம் செலுத்தும் நிமித்தம் பொலனருவை இசிபத்தனாராம விஹாரையின் விஹாராதிபதி பூஜ்ய ஸ்ரீ தம்மநந்த தேரர், பொலனருவை ஜயந்நி விஹாரையின் விஹாராதிபதி பூஜ்ய தம்மபால தேரர் மற்றும் பொலனருவை வித்தியலங்கார விஹாரையின் விஹாராதிபதி பூஜ்ய தெமுன்னாவே உபரத்ன தேரர் போன்றோர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

அத்துடன் பொலனருவை புத்தமதத்தின் பண்டிதர்களையும் சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்ட அவர் (13) ஆம் திகதி வியாழக்கிழமை பிபிதெனு பொலனருவை திட்ட பணியகத்தின் பணிப்பாளர் அவர்களையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது தளபதியவர்கள் பிபிதெனு பொலனருவை திட்டத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுடன் இத் திட்டத்தின் கட்டுமான பணிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் கல்தெம்ராவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விஜயாராம விஹாரைக்கும் விஜயத்தை மேற் கொண்டு அங்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் ‘சங்கவாசய’ கட்டிடத்தையும் மேற்பார்வையிட்டார்.

அத்துடன் மின்னேரிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

இவ் விஜயத்தின் போது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதியவர்களினால் இப் படைத் தலைமையகத்தின் அலுவலக தொடர்பாக பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.அதனைத் தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு படையினர்களுடன் உரையாற்றினார். latest Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals