Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2018 18:16:08 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி 12 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்கள் அவரது தலைமையகத்திற்கு கீ இயங்கும் 12 ஆவது படைப் பிரிவு மற்றும் ஏனைய படைத் தலைமையகங்களுக்கு டிசம்பர் மாதம் 11 – 12 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

12 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தளபதியை 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் வரவேற்று படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி 18 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கப்பட்டன.

பின்னர் படைத் தளபதியின் பங்களிப்புடன் அனைத்து படையினரது பங்கேற்புடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி வீரவலையில் உள்ள 122 ஆவது படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார். அதன் போது 122 ஆவது படைத் தளபதி பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களை தெரிவித்தார்.

பின்பு இந்த படைத் தலைமையகத்திற்குரிய படையணிகளான 3 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 23 ஆவது கஜபா படையணி தலைமையகத்திற்கும் விஜயத்தையும் மேற்கொண்டார்.

அத்துடன் ருகுனு மஹம்புர சர்வதேச மகாநாட்டு மைத்திய நிலையத்திற்கும் , சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் மத்தள விமான நிலையத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டார். Adidas footwear | Sneakers Nike Shoes