Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2018 11:18:46 Hours

66 ஆவது படை பிரிவினரின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அமைந்திருக்கும் 66 ஆவது படைப் பிரிவின் 9ஆவது ஆண்டு நிறைவானது 66ஆவது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக்க அவர்களின் தலைமையில் கடந்த (10) ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்பட்டன.

இந் ஆண்டு நிறைவை முன்னிட்டு 66ஆவது படைப் பரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரினால் பல நிகழ்வுகள் உட்பட கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் (08) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றன.

ஆதற்கமைய (09) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பூநரின் பௌத்த விஹாரையில் படையினரக்கான ஆசிர்வாதம் மற்றும் தாய் நாட்டிட்காக உயர் தியாகம் செய்த வீரர்களுக்கு போதி பூஜை நிகழ்வும் இடம் பெற்றன.

ஆதனைத் தொடர்ந்து ஆண்டு நிறைவு நாளில் படை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படைப் பிரிவின் படையினரால் இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் படைத் பிரிவின் வளாகத்தில் ஆண்டு விழாவை நினைவு கூறும் நிமித்தம் மர நடுகையின் பின்னர் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட தேநீர்; மற்றும் மதிய உணவு விருந்தில் படைத் தளபதி அவர்கள் கலந்து கொண்டார்.

இந் ஆண்டு நிறைவு நிகழ்வின் முடிவில் இசை நிகழ்வும் இடம் பெற்றன.Sport media | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov