Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2018 10:32:03 Hours

சக்கர நாற்காலியில் சவாரியை மேற்கொண்ட இராணுவ வீரனது சவால் பருத்திதுறையில் நிறைவு

இலங்கை இராணுவ 6 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் கெமுனு கருணாரத்ன அவர்கள் சக்கர நாற்காலியில் தெவுந்தரதொடுவையில் இருந்து பருத்திதுறை வரைக்கும் 576 கிலோ மீற்றர் வரைக்கும் சென்று தனது சாதனையை (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவு செய்தார்.

இவரது இந்த சாதனை நிறைவின் போது பருத்திதுறையில் வைத்து இவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி , இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பிரதேச மக்கள் இவரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த போர் வீரனான கோப்ரல் கெமுனு குலரத்ன பாங்கொல்ல அபிமங்சல – 3 மத்திய நிலையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்கேற்றி தனது அவயங்களை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளார்.

இவர் இந்த சவாரியை டிசம்பர் 03 ஆம் திகதி ஆரம்பித்து 8 நாட்கள் தொடர்ச்சியாக வன்னி, கிளிநொச்சி ஊடாக யாழ் குடாநாட்டை வந்தடைந்து தனது சாதனையை நிறைவு செய்தார். இவரது இந்த பயணத்திற்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி வீதியூடாக செல்வதற்கு தனது பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

வடமராச்சி தெற்கு மரதன்கேனிபிரதேச செயலகஅரச அதிகாரிகளும், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும், பொலிஸ் உயரதிகாரிகளும் அப்பிரதேசத்தால் சவாரி செய்யும் போது இவரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வவுனியா பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் பூ ஓய 8 ஆவது பொறியியலாளர் படையணி, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய, வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட உயரதிகாரிகளான பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலாள், கேர்ணல் அணில் பீரிஸ், 561 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் ஏ.எஸ்.பி சில்வா அவர்கள் வவுனியாவில் வைத்து வரவேற்றனர். latest jordan Sneakers | Nike