Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2018 20:34:51 Hours

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தொம்பகொட புதிய கிரிக்கெட் மைதானத்தில் இராணுவ தளபதியினால் முதல் பந்துவீச்சுக்கு துடுப்பாட்டம்

இலங்கை இராணுவத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தொம்பகொடயில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ போர்கருவி படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானம் கடந்த (10) ஆம் திகதி திங்கட்கிழமை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் முதல் தடவையாக புதிய புல்வெளிகளில் இராணுவம் படையணிகளுக்கிடையிலான T 20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை இலங்கை இராணுவ போர்கருவி படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் தலைவரும் இலங்கை இராணுவ போர்கருவி மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிமல் வித்தானஹே அவர்களால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி நினைவு படிகத்தை திறந்து வைத்ததன் பின்னர் விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலின் முன்பாகவும் புதிய மைதானத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் முதல் பந்து வீசுவதற்காக விளையாட்டு மைதானத்திற்கு நுழைந்தார்.

இந்ந 20-20 கிரிக்கெட் போட்டியில் போட்டியிட 20 இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப் படுத்தி கிரக்கெட் போட்டியாளர்கள் கலந்கொண்டனர். இப் போட்டி இறுதியில் இலங்கை இராணுவ போர்கருவி படை அணியினர்; மற்றும் இலங்கை இராணுவ பீரங்கி படை அணியினர்; தேர்ந்தெடுக்கப்பட்டன.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை பீரங்கித் துடுப்பாட்ட அணியினர் 15 புள்ளிகளை பெற்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இப் போட்டித் தொடரில் T 20 கிரிக்கெட் போட்டி -2018 போட்டியில் சாம்பியன்ஷிப்பை பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணி அவர்களால் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சான்றிதல் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டன.

இந்த தொடக்க நிகழ்வுக்கு இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண, இலங்கை இராணுவ தொண்டர் படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ், நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதான நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, மேஜர் ஜெனரல் அனுர சுத்தசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக் கிரிக்கெட் மைதானம் புதிய தொழிநுட்ப வசதியுடன் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டதுடன் இதில் இரண்டு குளிர்சாதன வசதி இல்லாத அறைகள், ஒரு உணவகம் மற்றும் நான்கு பயிற்சி அறைகள் அமைக்கப்ட்டடுள்ளதுடன் இக் கிரிக்கெட் மைதானம் 3 ஆண்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு அரங்கம் நிறைவு செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய அரங்கம் இராணுவத்தினரக்கு மட்டுமல்லாமல் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கும், விளையாட்டு கழகத்தின் வீரர்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இம் மைதானம் தேசிய ஜூனியர் வீரர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளையும் உள்ளடக்கு அமைக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானம் கட்டும் பொருட்டு இலங்கை இராணுவத்தின் இராணுவப் படைக்கு பல நிதி திட்டங்களில் 50 மில்லியன் ரூபா செலவிட்டப்பட்டுள்ளனர். Running sports | Entrainement Nike