Header

Sri Lanka Army

Defender of the Nation

04th December 2018 11:09:07 Hours

கிழக்கு தளபதி படைத் தலைமையங்களுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு கீழ் இயங்கும் படைத் தலைமையக அலுவலகங்களுக்கு தனது அதிகாரபூர்வமான விஜயத்தை கடந்த (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற் கொண்டார்.

அதன் பின்னர் இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி 4 ஆவது கெமுனு ஹேவா படையணியினரால் இராணுவ கௌரவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து படைத் தலைமையக வளகத்தில் தளபதி அவர்களின் வருகையின் நினைவாக மரக் கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றது. ஆதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாயமாக செயல்பாடு மற்றும் நிர்வாக அம்சங்களை சுருக்கமாக கொண்ட கருத்துக்களும் விரிவுபடுத்தப்பட்டன.

ஆதன் பின்னர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்களால் பல்வேறு தொழில்சார் அம்சங்களில் பயிற்சி மற்றும் முக்கியத்துவம் குறித்த ஒழுங்குமுறைகளில் முக்கியத்துவம் குறித்து படையினருக்கு உரை நிகழ்த்தினர்.

ஆதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு படையினர்களின் தேவைகளையும் மற்ற நலன்புரி நடவடிக்கைகளையும் கலந்துரையாடியதுடன் பார்வையாளர்களின் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்பு ஒன்றையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு சில நிமிடங்களின் பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களால் புனானியில் புதிதாக நிர்மானிக்கப்படும் பிராந்திய யுத்த உபகரண களஞ்சியத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன் இதன் திட்டத்தின் மூத்த திட்ட ஒழுங்கமைப்பாளரான பிரிகேடியர் வசந்த மததொல்ல அவர்களால் அக் கட்டடிடத்தின் தற்போதய நிலை பற்றியும் பல கருத்துக்களையும் படையினரின் பணிகள் தொடர்பாக பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர், மேஜர் ஜெனரல் ஜயசேகர, அவர்கள் 232ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற் கொண்டு படையினர்களிடம் உரையாற்றியதுடன் வருகையின் அடையாளமாக மரக் கன்றும் நட்டுவைத்தார். ஆத்துடன் இப் படைப் தலைமையகத்தின் பிரிகேடியர் தளபதி கேர்னல் ரோஷன் ஜெயமன்னா அவர்களால் படையினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஒரு சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்.

ஆதனைத் தொடர்ந்து நாள் முடிவில் கிழக்கு தளபதியவர்கள் தொப்பிகலை சென்றடைந்தார். அதன் பின்னர் அங்கு வரலாற்று நினைவுச்சின்னமான பல இடங்களையும் பார்வையிட்டார்.

ஆதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (1) ஆம் திகதி கிழக்கு தளபதியவர்கள் 24ஆவது படைப் பிரிவு தலைமையகம் 241 ஆவது மற்றும் 242 ஆவது படைத் தலைமையங்களுக்கும் தனது முதல் முறையான விஜயத்தை மேற் கொண்டார்.

ஆதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையகத்திற்கு பிரதான அதிதியாக வருகை தந்த கிழக்கு தளபதிக்கு 24 ஆவது படைப் பிரிவு பிரதான நுழைவாயிலில் வைத்து ஒரு உத்தியோகபூர்வ கௌரவ மரியாதை வழங்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து 24 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களால் வரவேட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி 24 ஆவது படைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 ஆவது இலங்கையின் தேசிய பாதுகாப்பு படையணியின் படையணியினரால் கௌரவப் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் படைத் தலைமையக வளகத்தில் மாம்மர கன்றும் நடவு செய்தார். ஆதனைத் அதாடர்ந்து படையினர்களிடம் உரையாற்றினார் மற்றும் அத்துடன் அவர்களை அர்ப்பணிப்புடன் மற்றும் ஒழுக்கத்துடன் பணியாற்றும்படி வலியுறுத்தினார்.

அதே பிற்பகலில், கிழக்கு புத்தங்கல ஆனந்த தேரர் அவர்களளையும் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் 241ஆவது மற்றும் 242ஆவது படைப்பிரிவு தலைமையகத்தையும் பார்வையிட்டார். ஆதன் பின்னர் படைத் தலைமையகத்தின் நிர்வாகத்தின் அம்சங்கள் செயல்பாட்டுத் தேவை நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் படையினர்களின் தேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்.

அவரது நிகழ்ச்சி நிரலின் கடைசி பகுதிக்கு வருகையை மேற் கொண்டு ஊரணி பொத்துவில் 242 ஆவது படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட விடுமுறை பங்களாவையும் திறந்துவைத்தார்.affiliate link trace | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival