Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 13:40:35 Hours

வன்னி படையினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

நென பஹான நிறுவனத்தால் ரோயல் கல்லூரி சங்கத்தினரின் திட்டத்திற்கு அமைவாக வன்னி பாதுகபர்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்போடு மற்றுமோர் வறிய குழும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணப் பொருட்கள் நவம்பர் 23-24ஆம் திகதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அந்த வகையில் குளுக்குனாமடுவை வித்தியாலயம் வஹால்கட னு-05 வித்தியாலயம் பதவிய னு-10 மைத்திரி வித்தியாலயம் மற்றும் ஜயந்திவெவ மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப் பாடசாலை உபகரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறான சமூக சேவைத்திட்டமானது கொழும்பு ரோயல் கல்லூரியில் மூன்றாவது முறையாக இடம் பெறும் நென பஹான திட்டமாக காணப்படுவதுடன் இவை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க குறைந்த வருமானத்தைப் பெரும் குடுபத்த்தினரை முன்னிலைப்படுத்தி இடம் பெற்றது.

மேலும் குளுக்குனாமடுவை வித்தியாலத்திற்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் 21ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் குமார் ஜயபதிரன அவர்களின் தலைமையில் 211ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் எம் ஜி டி டீ ரத்தினசேகர அவர்களின் கண்காணிப்பில் 2ஆவது தொண்டர் விஜயபாகு காலாட் படையணியால் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு பிரதேசங்களில் பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது 62ஆவது படைத் தலைமைய தளபதியான பிரிகேடியர் ஜெ எம் யூ டீ ஜயசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் இவ் நென பஹான எனும் திட்டமானது கொழும்பு ரோயல் கல்லூரி சங்கத்தின் அங்கத்தவரான திரு ரமித் பெரேரா அவர்களால் இச் சிரமமான பிரதேசங்களில் பாடசாலை உபகரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 62ஆவது படைத் தலைமையக சிவில் தொடர்பாடல் அதிகாரிகள் உயர் அதிகாரிகள் மற்றும் பாரிய அளவிலான பாடசாலை மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். best shoes | Nike for Men