Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2018 20:59:45 Hours

சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழா

இராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இலங்கை சமிக்ஞைப் படையினர் வரவேற்றனர். மேலும் அணிவகுப்பு நிகழ்விற்கான மைதானத்தில் இராணுவத் தளபதியவர்களை இலங்கை சமிக்ஞைப் படை மையத்தின் தளபதியான பிரிகேடியர் பாலித பெரேரா மற்றும் இலங்கை சமிக்ஞைப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க போன்றௌர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து உயிர்நீத்த சமிக்ஞைப் படையினரின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது இராணுவத் தளபதியவர்களால் மரணித்த படையினரின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

மேலும் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவை முன்னிட்டு இராணுவத் தளபதி மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் மூத்த கோப்ரல் அவர்களால் கோப்ரல்கள் மற்றும் சார்ஜன்ட்களுக்கான உணவரை போன்றன திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முக்கிய அம்சமாக தபால் திணைக்களத்தின் தபால் சேகரிப்பு பிரிவினரால் சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு முத்திரை வெளியிடப்பட்டது. இதன் போது முத்திரை உரை இராணுவத் தளபதியவர்களுக்கு கையளிக்கப்பட்டதோடு தபால் திணைக்களத்தின் செயலாளரான திரு ஆர் எம் டீ பீ மீகஸ்முல்ல அவர்களுக்கு நன்றிகளைத் தளபதியவர்கள் தெரிவித்தார். தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத தொடர்பாடல் அதிகாரியான திரு ஷாந்த குமார மீகம போன்றோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதே வேளை சமிக்ஞைப் படையின் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களால் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு நினைவூச் சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு பிரதம அதிதியவர்களால் படையினருக்கான உரையாற்றப்பட்டதோடு இதன் போது வரவேற்புரையானது சமிக்ஞைப் படையணித் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது இராணுவத் தளபதியவர்களால் சமிக்ஞைப் படையணித் தலைமையக வளாகத்தில் நாக மரக் கன்றானது இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு நடப்பட்டது.

மேலும் இப் படைத் தலைமையகத்தில் சமிக்ஞைப் படையினருக்கு புதிதாக அமையப்பெற்ற தகவல் தொடர்பாடல் ஆய்வூகூடத்தை (ICT Trg Lab) பார்வையிட்ட இராணுவத் தளபதியவர்கள் இறுதியாக அதிதிகள் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

மேலும் தளபதியவர்களால் படையினருடான குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.affiliate link trace | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf