Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2018 19:02:07 Hours

இராணுவ போர்கருவி படையணியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு இராணுவ தளபதி வருகை

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொம்பகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பீ.எஸ் விதானகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி பிரதம அதிதியாக (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருகை தந்தார்.

வருகை தந்த இராணுவ தளபதி போர்கருவி படைத் தலைமையகத்தினுள் நிர்மானித்து வரும் சர்வதேச கிரிக்கட் மைதானத்தையும் பார்வையிட்டு நிர்மானிப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் மேற்கொண்டார்.

அத்துடன் அன்றைய தினம் இந்த படைத் தலைமையகத்தினுள் இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார். அச்சமயத்தில் விளையாட்டுத் துறை முன்னேற்றம், படையணிகளின் முன்னேற்றம் தொடர்பாக இராணுவ தளபதி இப்படையணியின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

"2017 ஆம் ஆண்டில் ஆயுத களஞ்சிய தொழிற்சாலையை நிறுவி போர்கருவி படையணி இராணுவத்திலுள்ள ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் பாரிய பொறுப்பு வாய்ந்த கடமையை மேற்கொள்கின்றன என்று இராணுவ தளபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இந்தப் படையணி யுத்தத்தின் முன்னரும் யுத்தத்தின் பின்னரும் பாரிய சேவையை இராணுவத்தினுள் ஆற்றியுள்ளது.

இலங்கை போர்கருவி படையணியானது 1949 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் சிலோன் இராணுவம் என்று ஆரம்பிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 1 ஆம் திகதி கிருலப்பனையில் ஆயுத களஞ்சியசாலை ஆரம்பிக்கப்பட்டன. மேஜர் பீ.ஜி பிரிச்சர் போர்கருவி பணியகத்தின் பணிப்பாளராக 1950 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அவருடன் அன்றைய காலத்தில் 2 இராணுவ அதிகாரிகள், 2 ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள, 1 பதவி நிலைச் சார்ஜன், 3 சாஜன்களுடன் இந்த படையணி ஆரம்பிக்கப்பட்டன. Running sport media | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta