Header

Sri Lanka Army

Defenders of the Nation

logo logo logo

11th October 2018 20:03:41 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவ தின நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு முன்னரங்க வளாகத்தினுள் இராணுவ நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.

மேலும் முல்லைத்தீவு மற்றும் முள்ளியாவளி நகரத்தில் இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவ நினைவு தின நிகழ்வுகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் டப்ள்யூ.டீ.சி கொஸ்தா அவர்களது தலைமையில் ஒக்டோபர் (10) ஆம் திகதி இடம்பெற்றன.

மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 591, 592 மற்றும் 593 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் முல்லைத்தீவு, கலப்பாடு நகரத்திலும், அலம்பில் கடலோர பிரதேசங்களில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகம், முத்தியான்கட்டுகுளம் ஜீவனகர் பிள்ளையார் கோயில் வளாகம், வன்னைவிழுது முன்பள்ளி வளாகங்கள் 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 150 படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.